அரசு பள்ளியில் ஆசிரியர் பற்றாக்குறை; வகுப்பை புறக்கணித்த மாணவர்கள்
ஊத்துக்கோட்டை : அரசு பள்ளியில் ஆசிரியர்கள் பற்றாக்குறையால் அவதிப்பட்ட மாணவர்கள், வகுப்பை புறக்கணித்து நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்எல்லாபுரம் ஒன்றியம், மாளந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் 250க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பயில்கின்றனர்.
இங்கு, 12 ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். ஆசிரியர்கள் மாறுதலுக்கான கலந்தாய்வு தற்போது நடந்து வருகிறது. இதில் மாளந்துார் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து எட்டு ஆசிரியர்கள், ஒரே நேரத்தில் மாறுதல் பெற்று சென்றனர். 10 நாட்களாக, நான்கு ஆசிரியர்கள் மட்டுமே பணியில் இருந்தனர்.மாணவர்களுக்கு கல்வி கற்றுத்தர ஆசிரியர்கள் இல்லாத நிலை ஏற்பட்டதால், ஆத்திரமடைந்த பெற்றோர் நேற்று மாணவர்களின் வகுப்பறையை புறக்கணித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ஊத்துக்கோட்டை டி.எஸ்.பி., சாரதி, தாசில்தார் ரமேஷ் மற்றும் தலைமையாசிரியர் ஆகியோர், மாணவர்களிடம் பேச்சு நடத்தினர்.அவர்கள், 'ஐந்து ஆசிரியர்கள் இந்த பள்ளிக்கு மாற்றலாகி வருகின்றனர். விரைவில் அவர்கள் பணியில் சேர்வர்' என கூறினர்.இதனால் சமாதானம் அடைந்த பெற்றோர், தங்களது பிள்ளைகளை வகுப்பறைக்கு அனுப்பி வைத்தனர்.
Comments
Post a Comment