தமிழக அரசை கண்டித்து மார்ச் 22ல் போராட்டம்; ஆசிரியர் கூட்டணி முடிவு
சிவகங்கை : சொன்னதை செய்யாத தமிழக அரசை கண்டித்து மார்ச் 22 ல் மாநில அளவில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில துணை தலைவர் ஆரோக்கியராஜ் தெரிவித்தார்.அவர் கூறியதாவது, சட்டசபை தேர்தலின் போது ஆட்சி அமைந்தால் அரசு ஊழியர்களுக்கு 2003 ஏப்.,1 முதல் சி.பி.எஸ்.,யை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டம் அறிவிக்கப்படும் என தி.மு.க., தேர்தல் அறிக்கையில் தெரிவித்தது.
ஆட்சியில் அமர்ந்து 10 மாதங்களை தொட்ட போதும் இது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. இதை கண்டித்து இந்திய பள்ளிஆசிரியர் கூட்டமைப்பு சார்பில் மார்ச் 22 அன்று மாலை அந்தந்த மாவட்ட தலைநகரில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.
சி.பி.எஸ்., தேசிய கல்வி கொள்கை ரத்து, பொதுத்துறை நிறுவனங்களை பாதுகாக்கும் கோரிக்கையை முன்வைத்து மார்ச் 28, 29 ல் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்தும் பொது வேலை நிறுத்தத்தில் தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி பங்கேற்கும். இடைநிலை ஆசிரியருக்கு மத்திய அரசுக்கு இணையான சம்பளம் வழங்க வேண்டும். உயர்கல்வி ஊக்கத்தொகை, ஆசிரியரின் மாவட்ட மாறுதல் கவுன்சிலிங்கை நடத்த வேண்டும் என்பதற்காக போராட்டம் அறிவித்துள்ளோம் என்றார். சிவகங்கை செயலாளர் முத்துப்பாண்டியன் உடனிருந்தார்
Comments
Post a Comment