மாணவர்களுக்கு 2022-2023 கல்வியாண்டில் நாடு முழுவதும் 21 புதிய சைனிக் பள்ளி: மத்திய அரசு ஒப்புதல்




நாடு முழுவதும் 2022-2023 கல்வியாண்டில் கூட்டு முயற்சியில் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியுள்ளது.


தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் உள்ள விகாசா என்ற தனியார் பள்ளியுடன் இணைந்து சைனிக் பள்ளியை திறப்பதற்கு பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. அரசு சாரா நிறுவனங்கள், தனியார் பள்ளிகள், மாநில அரசுகளுடன் இணைந்து கூட்டு முயற்சியாக நாடுமுழுவதும் 21 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவதற்கு பாதுகாப்புத் துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.


நாட்டில் 100 புதிய சைனிக் பள்ளிகளை தொடங்குவது என்ற அரசின் முன்னெடுப்பின்கீழ் முதற்கட்ட நடவடிக்கையாக இப்பள்ளிகள் தொடங்கப்படவுள்ளன. தற்போதுள்ள சைனிக் பள்ளிகளிலிருந்து இது மாறுபட்டதாக இருக்கும். தேசிய கல்விக் கொள்கையுடன் ராணுவத்தில் சேர்வது உட்பட சிறந்த வேலைவாய்ப்புகளை பெறும் வகையில், தரமான கல்வியை அளிக்க 100 புதிய சைனிக் பள்ளிகளை அமைக்க வேண்டும் என்ற பிரதமர் நரேந்திர மோடியின் தொலைநோக்குப் பார்வையின் கீழ் இது தொடங்கப்படவுள்ளது.


இதன்மூலம், தனியார் துறையும் அரசுடன் இணைந்து நாட்டை கட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டு இன்றைய இளைஞர்களை நாளை பொறுப்புமிக்க குடிமக்களாக திகழச் செய்ய முடியும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் வாயிலாக ஒப்புதல் அளிக்கப்பட்ட 20 சைனிக் பள்ளிகள் குறித்த விவரங்களை www.sainikschool.ncog.gov.in. என்ற இணைய தளத்தில் காணலாம். மொத்தமுள்ள 21 புதிய சைனிக் பள்ளிகளில் 7 பள்ளிகள் வழக்கமான பள்ளிகளாகவும், 14 பள்ளிகள் உண்டு-உறைவிட பள்ளிகளாகவும் இருக்கும்.

Comments

Popular posts from this blog