ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தல்
சிவகங்கை : 2013 ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பள்ளிகளில் நியமிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநில பொது செயலாளர் எஸ்.மயில் தெரிவித்தார்.அவர் கூறியதாவது: 2013 முதல் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் பணியிடத்திற்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்பட்டனர்.
அவர்களுக்கு 9 ஆண்டாக பணி நியமனம் இல்லை. 2012ல் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றோரை மட்டுமே பணி நியமனம் செய்துள்ளனர். எனவே இவர்களுக்கு உடனே பணி வழங்க வேண்டும். ஆசிரியர் பணி நியமனத்திற்கு பல கட்ட தேர்வு நடத்தும் அரசாணை எண் 149 ஐ ரத்து செய்ய வேண்டும்.தமிழகத்தில் அரசு தொடக்க நடுநிலை பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் காலிபணியிடம் ஆயிரக்கணக்கில் உள்ளன.
அப்பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும். கொரோனா காலத்திற்கு பின் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை அதிகரித்துள்ளன. அந்தளவிற்கு ஆசிரியர் பணியிடமும் அதிகளவில் நிரப்ப வேண்டிய நிலை உள்ளது. ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வான ஆசிரியர்களுக்கு பணியிடம் வழங்க கோரி போராடி வருவோருக்கு தமிழக அரசு வாழ்வாதாரம் அளிக்க வேண்டும், என்றார்.
Comments
Post a Comment