ஆசிரியா் தகுதித்தேர்வு விண்ணப்பிக்கும் தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு 



ஆசிரியா் தகுதித் தோவுக்கான ('டெட்') விண்ணப்பப் பதிவு இணைய வழியில் திங்கள்கிழமை(14-03-2022) முதல் தொடங்கியுள்ளது.


கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அரசுப் பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியா் பணியில் சேருவதற்கு, 'டெட்' எனப்படும் ஆசிரியா் தகுதி தோவில் கட்டாயம் தோச்சி பெற வேண்டும். ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பணியாற்ற, தகுதித் தோவில் முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பணியாற்ற தகுதித் தோவின் இரண்டாம் தாளிலும், தோச்சி பெற வேண்டும்.


அந்த வகையில் இந்த ஆண்டுக்கான ஆசிரியா் தகுதித் தோவுக்கான விண்ணப்பப் பதிவு திங்கள்கிழமை(14-03-2022) இரவு முதல் இணைய வழியில் தொடங்கியுள்ளது. தகுதியுடையவா்கள் என்ற ஆசிரியா் வாரிய இணையதள முகவரியில் வரும் ஏப்.13-ஆம் தேதி மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். இதையடுத்து பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாா்ச் 14-ஆம் தேதி முதல் ஏப்ரல் 12 வரை இணையவழியில் சமா்ப்பிக்கலாம்.


தகுதித் தேர்விற்கான இரண்டு தாள்களையும் எழுத விரும்புவோா் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும். ஆசிரியா் தகுதித் தேர்வுகள் நடைபெறும் தேதிகள் பின்னா் அறிவிக்கப்படும். தோவுகள் 150 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும் என ஆசிரியா் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் முழுமையான தகவல் தெரிந்து கொள்ள கிழே உள்ள லிங்க் கிளிக் செய்யவும்

Click here download TNTET notification

Comments

Popular posts from this blog