கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்!: சென்னையில் மார்ச் 12ம் தேதி ஆதி திராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு..!!
சென்னையில் மார்ச் 12ம் தேதி ஆதி திராவிடர், பழங்குடி இனத்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையமானது மத்திய அரசாங்கத்தால் ஜூன் மாதம் 1968ம் ஆண்டு தொடங்கப்பட்டது. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வாழ்வாதாரத்தை முன்னேற்ற இந்த மையம் நிறுவப்பட்டது. இந்த மையத்தில், தொழிற்கல்வி பயிற்றுவித்தல், தொழில் வழிகாட்டுதல், ஆலோசனை, நம்பிக்கை வளர்ப்பு திட்டம், முன் ஆட்சேர்ப்பு பயிற்சி, வேலை வாய்ப்பு, சுய வேலைவாய்ப்பு, ஆகிய நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
இந்த மையத்தின் மூலம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான வேலை வாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வேலை வாய்ப்பு முகாம், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடி இனத்தவர்களுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம், வேலை வாய்ப்பு அலுவலகம், சாந்தோம் சர்ச் அருகில் சாந்தோம் மெயின் ரோடு, சாந்தோம் சென்னை, என்ற முகவரியில் வருகின்ற 12 மார்ச் 2022 அன்று காலை 09 .00 AM மணி முதல் மாலை 03.00 PM மணி வரை நடைபெற உள்ளது.
இந்த வேலை வாய்ப்பு முகாமில் 20 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனம், சென்னை சுற்றியுள்ள நிறுவனங்கள் கலந்து கொள்ள உள்ளது. இந்த வேலை வாய்ப்பு முகாமில் SSLC முதல் பட்டய மேற்படிப்பு (பொறியியல் மற்றும் இதர படிப்பு) படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஆகவே சென்னையை சேர்ந்த 18 முதல் 30 வயதுக்கு உட்பட்ட ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிஇன பட்டதாரிகள் அனைவரும் இவ் வேலை வாய்ப்பு முகாமில் கலந்துகொண்டு வாய்ப்பினை பயன்படுத்தி கொள்ள வேண்டுகிறோம்.
தங்களிடம் எங்கள் பணிவான வேண்டுகோள் என்னவென்றால், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடிஇன நலசங்கத்தை சேர்ந்த மற்றும் தெரிந்த நண்பர்களுக்கு இந்த வேலை வாய்ப்பு முகாம் பற்றி தெரியப்படுத்தி அனைவரும் பயனடையுமாறு வேண்டிக் கேட்டுக்கொள்கிறோம் என துணை பிராந்திய வேலைவாய்ப்பு அதிகாரி குறிப்பிட்டிருக்கிறார்.
Comments
Post a Comment