தேர்வு நேரத்தில் ஆசிரியர்கள் இடமாற்றம் : கண்டனம் தெரிவித்து மறியல் செய்த மாணவர்கள் !!
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிபாக்கம் அடுத்த மேல் வீராணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் 110க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்தப் பள்ளியில் 110 மாணவர்களுக்கு தற்போது தலைமை ஆசிரியர் உட்பட 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருவதாக கூறப்படுகிறது. ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு அடிப்படையில் மூன்று ஆசிரியர்கள் வேறு பகுதிக்கு நேற்று மாற்றம் செய்ய ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
100 மாணவர்களுக்கு ஒரு தலைமையாசிரியர் ஒரு ஆசிரியர் மட்டுமே வழங்கப்பட்டதாகவும் ஆசிரியர்கள் பற்றாக்குறை ஏற்பட்டதால் பள்ளிக்கான புதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால் பள்ளி மாணவர்கள் தங்களுக்கு தேர்வு நெருங்கி வரும் சமயத்தில் மாவட்ட கல்வி நிர்வாகம் ஆசிரியர்கள் மாற்றம் செய்திருப்பது கண்டிக்கத்தக்கது என்று பள்ளி மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சாலை மறியல் சம்பவம் குறித்து பானாவரம் காவல்துறையினர் மற்றும் வட்டார கல்வி அலுவலர்கள் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தையில் மாணவர்களின் கோரிக்கையை ஏற்று உடனடியாக மாற்றம் செய்த ஆசிரியர்களை மீண்டும் நியமிப்பது அல்லது புதிய ஆசிரியர்களை நியமிக்க உடனே பரிசீலனை செய்வதாக உறுதியளித்த பின்னர் மாணவர்கள் சாலைமறியல் போராட்டத்தில் இருந்து கைவிட்டுச் சென்றனர். இதனால் பாணாவரம் காவேரிப்பாக்கம் செல்லும் சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது
Comments
Post a Comment