டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வர்களே!.. தேர்வுத்துறை வெளியிட்ட மிக முக்கிய அறிவிப்பு..!!!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) வாயிலாக போட்டித் தேர்வுகள் நடத்தப்பட்டு அரசுத்துறையில் காலியாகவுள்ள பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.
கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தாக்கம் காரணமாக எந்தவிதமான போட்டித் தேர்வுகளும் நடைபெறவில்லை. தற்போது கொரோனா தாக்கம் குறைந்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பும் நிலையில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் 2022ஆம் வருடத்திற்கான அரசு போட்டித் தேர்வுகள் தொடர்பான கால அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதில் இந்த வருடம் 32 வகை போட்டித் தேர்வுகளானது நடத்தப்படும் என்று தேர்வாணையம் தெரிவித்து உள்ளது.
அந்த வகையில் சமீபத்தில் குரூப் 2, 2ஏ தேர்வு தொடர்பாக அறிவிப்பு வெளியாகியது. அதில் மார்ச் 23ஆம் தேதி வரை தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். இதையடுத்து மே 21ஆம் தேதி தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின் தற்போது குரூப்-1 தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. இந்த குரூப் 1 தேர்வு துணை ஆட்சியர், டிஎஸ்பி, ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர், கூட்டுறவு சங்கங்களின் துணைப் பதிவாளர், வணிகவரி உதவி ஆணையர், மாவட்ட தீயணைப்பு அலுவலர் போன்ற பணியிடங்களுகாக நடத்தப்பட்டு வருகிறது.
இதனிடையில் முதல்நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத் தேர்வு என்று 3 கட்டங்களாக தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த 2020ஆம் ஆண்டு குரூப்-1 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியது. அதன்பின் கொரோனா பெருந்தொற்று காரணமாக தேர்வை நடத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் குருப்-1 பணிகளுக்கான தேர்வு மார்ச் 4,5,6 போன்ற தேதிகளில் நடைபெறும் என்று தேர்வாணையம் தெரிவித்துள்ளது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. ஆகவே அதை விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் தேர்வு சென்னையில் மட்டுமே நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Comments
Post a Comment