TNPSC குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. வயது வரம்பு, கட்ஆஃப் & முக்கிய தகவல்கள் இதோ..!!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் நடத்தப்பட்டு வரும் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுக்கான தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
அதனை தொடர்ந்து அடுத்த மாதம் குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகும் என்று தேர்வர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர்.
குரூப் 4 தேர்வில் பத்தாம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு கிடையாது. டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு, தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், இளநிலை உதவியாளர், நிர்வாக அலுவலர், வரித்தண்டலர், வரைவாளர், நில அளவர் உள்ளிட்ட 7 விதமான பதவிகளுக்கு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த தேர்வு எழுதுவதற்கான கல்வித் தகுதி பத்தாம் வகுப்பு தேர்ச்சி. ஒரே ஒரு எழுத்து தேர்வு முறையில் மட்டுமே இந்த தேர்வு நடைபெறும். மேலும் தமிழ் மொழி டிஎன்பிஎஸ்சி போட்டித் தேர்வுகளில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் குரூப்-4 தேர்வு வினாக்கள் 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து கேட்கப்படுகின்றன.
இருப்பினும் சில வினாக்கள் 11 மற்றும் 12-ஆம் வகுப்பு பாடங்களில் இருந்து வந்துள்ளன. இந்த நிலையில் மாதிரி வினாத்தாள் மற்றும் புதிய பாடத்திட்டம் டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 300 மதிப்பெண்களுக்கு 90 மதிப்பெண்கள் எடுத்தால் தேர்ச்சி. இருப்பினும் இந்த தேர்வில் கட் ஆஃப் மதிப்பெண்களை பொறுத்தவரை எதனையும் குறிப்பிட்டு கூற முடியாது.
Comments
Post a Comment