TN TRB முதுகலை ஆசிரியர் காலிப்பணியிடங்களுக்கான போட்டித்தேர்வு... இன்றுடன் (பிப்.20) நிறைவு...!!!





ஆசிரியர் தேர்வு வாரியம் தமிழகத்தில் அரசு மேல்நிலை பள்ளிகளில் முதுகலை பட்டதாரி ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர், கணினி பயிற்றுநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு 2,207 பேரை நியமிக்கும் வகையில் போட்டி தேர்வை நடத்துகிறது.


இந்த நிலையில் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை முதல் கட்டமாகவும், பிப்ரவரி 16-ஆம் தேதி முதல் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை இரண்டாம் கட்டமாகவும் போட்டி தேர்வு நடத்தப்படுகிறது.


இந்த கால அட்டவணைப்படி பி.எட்., எம்.எட்., படித்த வெளி மாவட்டங்களில் வசிக்கும் பட்டதாரிகள் கடந்த 12 ஆம் தேதி முதல் தொடங்கிய இந்த போட்டி தேர்வுகளில் பங்கேற்று தேர்வினை எழுதி வருகின்றனர். மேலும் தேர்வர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது குறிப்பிட்டிருந்த அடையாள அட்டையின் நகலை எடுத்துச்செல்வது, தடுப்பூசி போட்ட சான்றிதழ் வைத்திருப்பது, முககவசம் அணிவது உள்ளிட்ட பல கட்டுப்பாடுகள் அடிப்படையில் தேர்வுகள் நடைபெற்று வருகிறது.


இந்த நிலையில் தமிழகம் முழுவதும் நேற்று உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றது. எனவே முதுகலை ஆசிரியர் பணிக்கான தேர்வு நேற்று நடைபெறவில்லை. ஏனென்றால் தேர்தல் பணியில் அரசு பள்ளி ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர். எனவே இன்று கணினி அறிவியல் பாடப்பிரிவுக்கான தேர்வு நடைபெறுகிறது.


எனவே தேர்வு மைய நுழைவுச்சீட்டு மற்றும் மாவட்ட நுழைவுச்சீட்டு ஆகியவற்றை அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த வகையில் தேர்வு இன்றுடன் (பிப்.20) முடிவடைகிறது. இதுவரை நடைபெற்ற தேர்வுகளுக்கான விடை குறிப்புகள் விரைவில் இணையதளத்தில் வெளியிடப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Comments

Popular posts from this blog