TN TRB முதுகலை ஆசிரியர்களுக்கான தேர்வு தள்ளிவைப்பு?.. வலுக்கும் கோரிக்கை..!!!!
தமிழகத்தில் கொரோனா தொற்றின் முதல் மற்றும் 2-வது அலைகளின் பாதிப்பு காரணமாக அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகள் கடந்த 2 ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்தது.
இதன் காரணமாக அரசு பணிக்காக காத்திருக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதையடுத்து 2 ஆண்டுகளாக போட்டித் தேர்வுகள் நடத்தி பணி நியமனம் செய்யப்படாத காரணத்தால் காலிப் பணியிடங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
ஆசிரியர் தேர்வு வாரியம் வாயிலாக நடத்தப்படும் தேர்வுகளின் மூலம் தமிழக ஆசிரியர்கள் தகுதி வாரியாக தேர்வு செய்யப்படுகிறார்கள். இதற்கு தகுதி வாரியாக தனித் தனியாக தேர்வுகள் நடத்தப்படுகின்றது. முன்னதாக ஆசிரியர் தேர்வு வாரியமானது 29.01/2022 முதல் 06/02/2022 வரையுள்ள தேதிகளில் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வை நடத்த திட்டமிட்டது. ஆனால் அப்போது கொரோனா பரவல் அச்சம் அதிகரித்து வந்ததால் தேர்வுகள் பிப்ரவரி 12ஆம் தேதி முதல் 15ஆம் தேதி வரை தள்ளிவைக்கப்பட்டது.
தற்போது அந்த நாட்களில் ஆசிரியர் முதுகலைக் கல்வியியல் தேர்வுகள் நடக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முதுகலை ஆசிரியர் தேர்வுக்கு முன்பாகவே முதுகலை ஆசிரியர் கல்வியியல் தேர்வுகள் அந்த தேதிகளில் திட்டமிடப்பட்டதால் முதுகலை ஆசிரியர் போட்டித் தேர்வை வேறு தேதிகளில் தள்ளி வைக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பான முடிவை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments
Post a Comment