மக்கள் நல பணியாளர்கள் பணி: ஆய்வில் உள்ளது- தமிழ்நாடு அரசு தகவல்
பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும்பணி வழங்க ஆய்வு செய்வதாக உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது .
தி . மு . க . ஆட்சியில் நியமிக்கப்பட்ட மக்கள் நல பணியாளர்கள் 13 ஆயிரத்து 500 பேர் கடந்த 2011 ஆம் ஆண்டு பணியில் இருந்து நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் அவர்களுக்கு மாற்றுப்பணி வழங்குமாறு 2014 ஆம் ஆண்டு தீர்ப்பு கூறியது .
இதை எதிர்த்து தமிழ்நாடுஅரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் , சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு இடைக் கால தடை விதித்து 2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 23 ஆம் தேதி உத்தர
விட்டது .
இதற்கிடையில் கரோனா பேரிடர் காலத்தில் தங்களுக்கும் அரசு நிதி உதவி வழங்க வேண்டும் என மக்கள் நலப்பணியாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத் தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டி ருந்தது .
இந்த வழக்கு கடந்த மாதம் ( ஜனவரி 6) விசாரணைக்கு வந்த போது , தமிழ்நாடு அரசு சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட கடிதத்தில் , பணி நீக்கம் செய்யப்பட்ட மக்கள் நலப்பணியாளர்களுக்கு மீண்டும் பணி வழங்குவது தொடர்பாக தமிழ்நாடு அரசு முக்கிய முடிவு எடுக்கவுள்ளது , அதற்கான ஆலோசனைகளின் விவரங்கள் இன்னும் வழக்குரைஞர்களுக்கு தெரிவிக்கப்படாததால் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது .
இந்த கோரிக்கையை ஏற்று வழக்கை 4 வாரங்களுக்கு உச்சநீதிமன்றம் ஒத்தி வைத்தது .
4 வாரங்கள் கழித்து இன்று வழக்கு விசாரணைக்கு வந்தபோது , தமிழ்நாடு அரசு சார்பில் மக்கள் நலப்பணியாளர் களுக்கு மீண்டும் பணி வழங்குவது குறித்து ஊரக வளர்ச்சித்துறை ஆய்வு செய்து முன்மொழிவை அனுப்பி உள்ளது .
ஊரக வளர்ச்சித்துறையின் அந்த முன்மொழிவை பரிசீலனை செய்து தமிழ்நாடு அரசு உத்தரவு பிறப்பிக்கும் . அந்த பரிசீலனை செய்யப்பட , இந்த வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது .
Comments
Post a Comment