தமிழ்நாடு மின்சார வாரியத்திற்கு.. தமிழக அரசு போட்ட அதிரடி உத்தரவு.. பீதியில் வடமாநில பணியாளர்கள்.!!!!!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையமானது அரசு அலுவலகங்களில் காலியாகவுள்ள பணியிடங்களை போட்டி தேர்வுகள் மூலம் நிரப்பி வருகின்றன.
இந்நிலையில் தமிழ்நாடு மின் வாரியத்தில் இளநிலை உதவியாளர், உதவி பொறியாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு எழுத்து மற்றும் நேர்முக தேர்வு வாயிலாக சமீபத்தில் ஆட்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இந்த பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் 10ஆம் வகுப்பு அல்லது 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தமிழ் மொழியை ஒரு பாடமாக படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயம் ஆகும்.
இதனிடையில் மின் வாரிய பணியிடங்களில் தேர்வு செய்யப்பட்டவர்களில் வட மாநிலத்தவர்கள் இருக்கின்றனர். இந்நிலையில் தமிழ் பாடத்தை படிக்காமல் மின் வாரிய பணிக்கு தேர்வானவர்கள், பணியில் சேர்ந்ததில் இருந்து 2 வருடத்திற்குள் டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இந்த உத்தரவின்படி டிஎன்பிஎஸ்சி நடத்தும் தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாத பணியாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு, அதற்கு பணியாளர்கள் அளிக்கும் விளக்கம் சரியானதாக இல்லை என்றால், அவர்கள் பணியில் இருந்து நீக்கப்படுவர் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு தொடர்பாக மின்வாரியத்தில் தமிழ் தெரியாமல் வேலைக்கு சேர்ந்த சிலர், தமிழ் மொழி தேர்வில் இதுவரையிலும் தேர்ச்சி பெறவில்லை என்று சர்ச்சை கிளம்பியுள்ளது. இதனால் மின் வாரியத்திற்கு, தமிழக அரசு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, கடந்த 2011 முதல் 2020 வரையிலான 10 வருடங்களில், வெளிமாநிலங்களில் இருந்து வாரியத்தில் பணிக்கு சேர்ந்தவர்களில், தமிழ் மொழி தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் எத்தனை பேர், அவர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன போன்ற விபரங்களை விரிவான அறிக்கையாக விரைவில் அனுப்ப வேண்டும் என்று அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் வடமாநில ஊழியர்கள் வேலை போய்விடுமோ என்று பீதியில் இருக்கின்றனர்.
Comments
Post a Comment