இல்லம் தேடி கல்வி 6,868 மையங்கள்
திருப்பூர்:எல்.கே.ஜி., முதல் பிளஸ் 2 வரை அனைத்து வகுப்புகளும் துவங்கிய நிலையில், இல்லம் தேடி கல்வி' திட்டத்தின் கீழ், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளதாக திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.ஊரடங்கால், கற்றல் திறன் குழந்தைகளுக்கு வெகுவாக குறைந்துள்ளது.
நன்றாக படிக்கும் மாணவர்கள் கூட சரளமாக வாசிக்கவும், எழுதவும் சிரமப்படுகின்றனர். மாணவர்களிடையே ஏற்பட்டுள்ள இந்த கற்றல் இடைவெளியை குறைக்க, 'இல்லம் தேடி கல்வி' திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
ஒருங்கிணைப்பாளர்கள் கூறுகையில், ''திருப்பூரில் இத்திட்டம் துவங்கும்போது, 1,416 மையங்கள் அமைக்கப்பட்டன. தற்போது,எல்.கே.ஜி., முதல் அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. எனவே தன்னார்வலர்கள் அதிக ஆர்வம் காட்டத்துவங்கினர். தற்போது, 6,868 மையங்களாக உயர்த்தப்பட்டுள்ளது.மாவட்டத்தில், 7 ஆயிரம் மையங்கள் அமைக்க வேண்டும் என்பது இலக்கு. ஓய்வு பெற்ற ஆசிரியர்கள், கல்வியாளர்கள் முன்வந்தால், இலக்கை எளிதாக அடைய முடியும். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு உதவியாக இருக்கும்'' என்றனர்
Comments
Post a Comment