ஆறாவது முறையாக ஆசிரியர்கள் கலந்தாய்வு அட்டவணை திருத்தம்: தொடரும் குழப்பம்
மதுரை:தமிழகத்தில் தொடக்க கல்வித்துறை ஆசிரியர்கள் மாறுதல் மற்றும் பணிநிரவல் கலந்தாய்வு அட்டவணை 6வது முறையாக திருத்தம் செய்யப்பட்டதால் ஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர்.ஆசிரியர் நலன் கருதி ஆண்டுதோறும் நடத்தப்படும் மாறுதல் கலந்தாய்வு ஜன.24 முதல் துவங்கும் என முதலில் அறிவிக்கப்பட்டது.
ஆனால் காரணமின்றி ஜன.27க்கு மாற்றப்பட்டது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி தேர்தல் பயிற்சி வகுப்பு, ஓட்டுப் பதிவுக்காக மேலும் இருமுறை திருத்தப்பட்டது.இதையடுத்து அங்கன்வாடி மையங்களுக்கு மாறுதல் செய்யப்பட்ட இடைநிலை ஆசிரியர் 2381 பேர் பள்ளி பணிக்கு மீண்டும் மாற்றும் பணிநிரவல் கலந்தாய்வு பிப்.16 ல் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது.இதற்காக அன்று இரவு 10:30 மணி வரை ஆசிரியர்கள் காத்திருந்த நிலையில் 'எமிஸில்' ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறால் கடைசிநேரம் ரத்து செய்யப்பட்டது. இதனால் ஐந்தாவது முறையாக திருத்தப்பட்ட நிலையில், பிப். 23ல் பணிநிரவல் கலந்தாய்வு நடக்கும் என 6வது முறையாக புதிய பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.திட்டமிடல் இல்லை தமிழ்நாடு ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி மதுரை மாவட்ட செயலாளர் சீனிவாசகன் கூறியதாவது:தேர்தல் பணி குறுக்கீடு போன்ற காரணத்திற்காக திருத்தம் செய்வது தவிர்க்க முடியாதது. ஆனால் 6வது முறையாக மாற்றம் செய்துள்ளது அதிகாரிகளிடம் திட்டமிடல் இல்லை என்பதை காட்டுகிறது. அங்கன்வாடி மையங்களுக்கு மாற்றப்பட்ட இடைநிலை ஆசிரியர் மீண்டும் பள்ளிக்கு நிரவல் செய்யும்போது அவர்கள் ஏற்கனவே ஒன்றியங்களில் பணியேற்ற நாளை முன்னுரிமையாக கணக்கிட வேண்டும் என்றார்.
Comments
Post a Comment