டிஎன்பிஎஸ்சி குரூப் 4 VAO காலிப்பணியிடங்கள்.. என்னென்ன பாடத்திட்டம்?... வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!





தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் அனைத்து துறைகளுக்குமான ஊழியர்களை போட்டி தேர்வுகள் மூலம் நியமனம் செய்து வருகிறது.


பதவிகளின் பணி நிலையை பொறுத்து தேர்வுகள் தனித்தனியாக நடத்தப்பட்டு வருகின்றது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக டிஎன்பிஎஸ்சி தேர்வுகள் நடத்தப்படாமல் இருக்கிறது. அதில் மிகவும் அடிப்படை கல்வியான 10ஆம் வகுப்பு கல்வித்தகுதியில் அதிக நபர்கள் கலந்துக்கொள்ளும் குரூப் 4, விஏஓ தேர்வு குறித்த எதிர்ப்பார்ப்பு நீண்டு வருகின்றது. இந்த தேர்வுகள் ஏப்ரல் மாதத்தில் நடத்தப்பட உள்ளதாக அண்மையில் அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதில் குரூப் 4 தேர்வின் வாயிலாக இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், கிராம நிர்வாக அலுவலர், வரித் தண்டலர், நில அளவர், வரைவாளர் ஆகிய 7 பணியிடங்கள் நிரப்பப்படும். தட்டச்சர் பதவிக்கு 10ஆம் வகுப்பு தேர்ச்சியுடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு தேர்வில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இதையடுத்து சுருக்கெழுத்தர் பதவிக்கு 10 ஆம் வகுப்பு தேர்ச்சி உடன் அரசு தொழில்நுட்ப தட்டச்சு மற்றும் சுருக்கெழுத்து இரண்டு தேர்விலும் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை (மற்றும்/அல்லது) முதுநிலை தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.


அதனை தொடர்ந்து குரூப் 4 தேர்விற்கு பொது பிரிவினராக இருந்தால் 21 முதல் 30 வயது வரையும், மற்ற வகுப்பினருக்கு 40 வயது வரையும் சலுகை உண்டு. அதன்பின் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பிற பணிகளுக்கு பொது பிரிவினருக்கு 18 வயது முதல் 30 வரையும், பிற வகுப்பினர்களுக்கு 35 வயது வரை சலுகை உண்டு. இதனிடையில் 10 ம் வகுப்பிற்கு மேல் படித்தவர்களுக்கு வயது வரம்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. தேர்வில் மொத்தமாக 200 வினாக்கள் இருக்கும் நிலையில், அதில் மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறும். 6 ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரையிலான பள்ளி பாடப்புத்தகங்களில் இருந்து தான் பாடத்திட்டம் இருக்கிறது.

Comments

Popular posts from this blog