டிஎன்பிஎஸ்சி குரூப்-2, 2A காலிப்பணியிடங்கள்... தேர்வர்களுக்கு வெளியான மிக முக்கிய அறிவிப்பு...!!!!!!
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக நடத்தப்படும் போட்டித் தேர்வுகள் குறித்த அறிவிப்புகள் கொரோனா தொற்று காலத்தில் வெளிவராமல் இருந்தது.
தற்போது கொரோனா தாக்கம் குறைந்து வருவதால் தேர்வு அறிவிப்புகள் வெளியாகி வருகிறது. அந்த அடிப்படையில் குரூப்-2 மற்றும் குரூப் 2A தேர்வுக்களுக்கான அறிவிப்பு பிப்ரவரி 18ம் தேதி வெளியானது. அதன்படி நேற்று (பிப்..23) முதல் மார்ச் 23 ஆம் தேதி வரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். அதுமட்டுமல்லாமல் குரூப் 2 மற்றும் குரூப் 2A தேர்வு மே 21 ஆம் தேதி நடைபெற இருக்கிறது.
இதையடுத்து நேர்முக தேர்வில் 116 காலிப்பணியிடங்களுக்கும், நேர்முக தேர்வு இல்லாத பதவிகளுக்கு 5,413 இடங்களுக்கும் என்று மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற இருக்கிறது. இத்தேர்வு எழுத விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். எனினும் ஒரு சில பதவிகளுக்கு கூடுதலாக சில தகுதிகள் தேவைப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. கொரோனா தொற்று காலகட்டத்தில் டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் நடைபெறாத காரணத்தால் அரசு அறிவித்துள்ள படி தற்போது பொது பிரிவினருக்கான வயது வரம்பு 32 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக இத்தேர்வில் பங்கேற்க அதிகபட்சம் வயது 30 ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது கொரோனா தாக்கம் காரணமாக வயது வரம்பில் தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் மற்ற பிரிவினர், எஸ்சி, எஸ்டி, அருந்ததியர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோர் சமுதாயத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு தேர்வெழுத உச்சபட்ச வயது வரம்பு கிடையாது. இந்த குரூப்-2 தேர்வானது முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என்று 2 தேர்வுகளாக நடத்தப்பட இருக்கிறது. அதில் தேர்ச்சி பெறுவோருக்கு நேர்முகத் தேர்வு நடைபெற இருக்கிறது. அதுமட்டுமல்லாமல் குரூப்-2ஏ தேர்வுக்கு முதல் நிலை தேர்வு மற்றும் முதன்மை தேர்வு என்று 2 தேர்வுகள் மட்டும் நடைபெறவுள்ளது
Comments
Post a Comment