தமிழகம் முழுவதும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு கிடையாது?.. அரசின் முடிவு என்ன?. லீக்கான தகவல்..!!!!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 வருடங்களாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருந்தது. அப்போது அனைத்து வகுப்பு பள்ளி மாணவர்களுக்கும் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு, அந்த கல்வி ஆண்டின் நடத்தப்பட்ட தேர்வுகளின் மதிப்பெண்கள் அடிப்படையில் மாணவர்கள் அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையடுத்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மூலமாக கொரோனா தாக்கம் சற்று குறைந்து வந்த நிலையில், கடந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன.
அதுமட்டுமல்லாமல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு ஜனவரி, மார்ச் மாதம் நடைபெறும் என்று கால அட்டவணை வெளியானது. ஆனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு குறித்து அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை. இதன் காரணமாக 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து ஆகுமா என்று பல்வேறு தரப்பிலிருந்து கேள்விகள் எழுந்து வருகிறது. கடந்த ஜனவரி முதல் வாரத்தில் கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்ததால் மீண்டும் பள்ளிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடந்தன. அதன்பின் பிப்..1 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது.
இந்நிலையில் பிப் 9 முதல் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு தொடங்கி நடந்து முடிந்தது. மேலும் 2ஆம் கட்ட திருப்புதல் தேர்வுகள் அடுத்த மாதம் நடைபெற இருக்கிறது. ஆனால் 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான திருப்புதல் தேர்வு தொடர்பாக இதுவரையும் எந்த விதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதற்கான ஆயத்தப் பணிகளும் கல்வித்துறை சார்பில் நடைபெறவில்லை என்று தெரிகிறது. இது 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுகிறது என்ற கருத்தை உறுதி செய்யும் அடிப்படையில் அமைந்துள்ளதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன..
Comments
Post a Comment