பாடக் குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது நடவடிக்கை பள்ளிக்கல்வித் துறை உத்தரவு
பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீதுமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள் ளது .
தமிழ்நாட்டில் பள்ளிக்கல்வித் துறை சார்பில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக் கும் , கற்றல் , கற்பித்தல் பணிகளை மேம்படுத்தவும் பல்வேறு செயல் திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வரு கின்றன .
அந்த திட்டங்களின் செயல்பாடுகள் , அரசுப் பள்ளிகளின் நிலை தொடர்பாக ஆய்வுக் கூட்டம் , கடந்த டிசம்பர் 15 ஆம் தேதி தொடங்கி மண்டல வாரியாக நடத்தப்பட்டு வருகிறது .
அதன்படி , பள்ளிக்கல்வி ஆணையர் க . நந்தகுமார் தலைமையில் விழுப்புரத்தில் மண்டல ஆய்வுக் கூட்டம் சமீபத்தில் நடந்தது .
அதில் விழுப்புரம் , கடலூர் , திருவண்ணாமலை , செங்கல்பட்டு மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள அரசுப் பள்ளிகள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டன .
அப்போது , பல்வேறு ஆசிரியர்கள் முறையாக பாடக்குறிப்பேடு எழுதாமல் இருப்பது தெரியவந்தது .
இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணை யரகம் சார்பில் அனைத்துமாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்கள் விவரம் :
பல்வேறு பள்ளிகளில் ஆசிரியர்கள் சரியாக பாடக் குறிப்பேடு எழுதாமல் உள்ளனர் . சில பள்ளிகளில் ஆசிரியர் களுக்கு பாடம் நடத்தவே தெரியவில்லை . ஆங்கில ஆசிரியர்கள் தமிழில் பாடம் நடத்துகின்றனர் . இதை மாற்றி அந்த ஆசிரியர்கள் ஆங்கிலத்தில் பேச அறிவுறுத்த வேண்டும் .
இதுதவிர , பாடக்குறிப்பேடு எழுதாத ஆசிரியர்கள் மீது தலைமை ஆசிரியர்கள் , அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .
பள்ளித் தலைமை ஆசிரியர்கள் தினமும் வளாகங்களை சுற்றிவந்து ஆய்வு செய்ய வேண்டும் . மாணவர்களுக்கு தடுப்பூசி போடுவது , பாலியல் தொடர் பான விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் .
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment