புதுச்சேரி மாநிலத்தில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 திருப்புதல் தேர்வு ஒத்திவைப்பு? ... பள்ளிக்கல்வி அதிகாரிகள் இன்று ஆலோசனை
புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததை தொடர்ந்து, ஒன்றாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, பள்ளிகளுக்கு கடந்த 10ம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட்டது.அவ்வகுப்புகளுக்கு ஆன்லைன் மூலம் கல்வி போதிக்கப்பட்டு வருகிறது.தற்போது பத்தாம் வகுப்பு , பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகள் மட்டும் வாரத்திற்கு ஆறு நாட்கள் இயங்கி வருகின்றன.பத்தாம் வகுப்பிற்கு வரும் 19ம் தேதி முதல் 27ம் தேதி வரையிலும், பிளஸ் 2 வகுப்பிற்கு 19ம் தேதி முதல் 28ம் தேதி வரையிலும் திருப்புதல் தேர்வு நடைபெறும் என பள்ளிக்கல்வி துறை அறிவித்து இருந்தது.இந்நிலையில், தமிழகத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று பரவலை கருத்தில் கொண்டு, 10ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை வகுப்புகளுக்கு ஜன., 31ம் தேதி வரை தமிழக அரசு விடுமுறை அறிவித்துள்ளது.மேலும், ஜன., 19ம் தேதி தொடங்க இருந்த 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கான திருப்புதல் தேர்வுகளும் ஒத்திவைக்கப்படுவதாக அறிவித்தது.தமிழக அரசின் பாடத்திட்டத்தை பின்பற்றும் புதுச்சேரியில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுக்கு தமிழக அரசின் கேள்வித்தாள்களை பயன்படுத்த, புதுச்சேரி பள்ளி கல்வித் துறை திட்டமிட்டு இருந்தது.ஆனால், தமிழகத்தில் திருப்புதல் தேர்வு ஒத்தி வைக்கப் பட்டுள்ள சூழ்நிலையில், புதுச்சேரியில் திருப்புதல் தேர்வுகள் நடத்தினால், தமிழக மாணவர்களுக்கு வினாத்தாள் முன்கூட்டியே வெளியாகும் வாய்ப்பு உள்ளது.வழக்கமாக, புதுச்சேரியில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்புகளுக்கு பொது தேர்வினை தவிர்த்து, காலாண்டு, அரையாண்டு, திருப்புதல் உள்ளிட்ட என மற்ற தேர்வுகளுக்கு புதுச்சேரி பள்ளி கல்வித் துறை தான் வினாத்தாள்களை தயாரித்து வழங்கும்.முதல் முறையாக, தமிழக அரசின் வினாத் தாள்களை திருப்புதல் தேர்விற்கு பயன்படுத்த அணுகி இருந்தது.புதுச்சேரியில் கொரோனா தொற்று தொடர்ந்து அதிகரித்தால், திருப்புதல் தேர்வினை கொண்டே இறுதி மதிப்பீடு செய்து விடலாம் என, கல்வித் துறை அதிகாரிகள் கணக்கு போட்டனர்.ஆனால், தமிழக அரசு பொதுத்தேர்வு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வை தள்ளி வைத்ததால், சிக்கல் ஏற்பட்டுள்ளது.புதுச்சேரி பள்ளிக்கல்வித் துறை வினாத்தாள் தயாரித்து திருப்புதல் தேர்வினை தனியாக நடத்தலாம்.
ஆனால் இரு நாட்களில் வினாத்தாள் தயாரித்து, தேர்வை நடத்த வாய்ப்பில்லை.இது தொடர்பாக பள்ளி கல்வித் துறை இன்று ஆலோசித்து, முடிவு எடுக்க உள்ளது.தமிழகத்தை பின்பற்றி, 10ம் வகுப்பு , பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் தள்ளிப் போகவே வாய்ப்புள்ளது.புதுச்சேரி மாநிலத்தில் பத்தாம் வகுப்பு திருப்புதல் தேர்வினை 16,600 மாணவ மாணவிகளும், பிளஸ் 2 திருப்புதல் தேர்வினை 14,200 மாணவ மாணவிகளும் எதிர்நோக்கியுள்ளது குறிப்பிடத் தக்கது.இன்று ஆலோசனைபள்ளி கல்வித் துறை இயக்குனர் ருத்ரகவுடு கூறியதாவது:தமிழகத்தில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு ஜன., 31ம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.அதேபோன்று, புதுச்சேரியில் பத்தாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு விடுமுறை அளிப்பது தொடர்பாக முதல்வர், பள்ளி கல்வித் துறை அமைச்சர் ஆகியோரிடம் ஆலோசித்து இன்று 17ம் தேதி முடிவு அறிவிக்கப்படும்.பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு சம்பந்தமாகவும் இன்று முடிவு எடுக்கப்படும்.இவ்வாறு
Comments
Post a Comment