Posts

Showing posts from December 30, 2021
  2020-21 கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் புதிய மாணவர்களின் சேர்க்கை குறித்த விவரம்.! பள்ளிக்கல்வித்துறை தகவல் நடப்பு கல்வி ஆண்டில் மட்டும் 6.73 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2020-21 கல்வி ஆண்டில் அதற்கு முந்தைய கல்வியாண்டை விட 1,28,000 மாணவர்கள் கூடுதலாக, அரசுப் பள்ளியில் சேர்ந்த நிலையில், நடப்புக் கல்வி ஆண்டில் மொத்தம் 6.73 லட்சம் மாணவர்கள் சேர்ந்துள்ளனர் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் மாணவர்களுக்கான கற்றல் சூழ்நிலை மற்றும் உயர் கல்வி சேர்க்கையில் ஏற்படும் பாதிப்பு போன்றவை காரணமாகத் தொடர்ந்து, அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வந்தது. இதனால் பல இடங்களில் அரசுப்பள்ளிகள் மூடப்படும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் கொரோனோ பாதிப்பால் ஏற்பட்ட பொருளாதார சுமையினால் பல பெற்றோர் தங்களின் குழந்தைகளை அரசுப்பள்ளிகளில் சேர்த்துள்ளனர். அதன்படி, அரசுப் பள்ளிகளில் நடப்பு 2021-2022ஆம் கல்வி ஆண்டில் 1-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளது. கடந்த கல்
  ஆசிரியா்களுக்கு விருப்பத்தின் பேரில் காப்பாளா் பணி: ஜன.6 முதல் 5 நாள்களுக்கு கலந்தாய்வு ஆதிதிராவிடா் நலத் துறையின்கீழ் 1,138 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன. இந்தப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்து நிலை ஆசிரியா்களுக்கும் விருப்பத்தின் அடிப்படையில் பொது மாறுதல் கலந்தாய்வு தற்போது இணையவழியில் நடைபெற்று வருகிறது. இந்த கலந்தாய்வு முடிந்த பின்னா், பட்டதாரி ஆசிரியா்களின் பாடவாரியான காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அடிப்படையில், விடுதிகளில் பணிபுரியும் காப்பாளா்கள் விருப்பத்தின்படி, ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கும், பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்கள் காலியாக உள்ள காப்பாளா் பணியிடங்களுக்கும் மாறுதல் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான கலந்தாய்வு வரும் ஜன.6-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி வரை சென்னை ஆதிதிராவிடா் நல ஆணையத்தில் நடைபெறவுள்ளது. இதில் பொது மாறுதல் கலந்தாய்வில் கலந்து கொள்ளாதவா்களும் கலந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.