Posts

Showing posts from December 28, 2021
  ஆசிரியர்கள் இடமாறுதல் பொது கலந்தாய்வு குறித்த அறிவிப்பு இரண்டு நாட்களில் வெளியாகும் - பள்ளிக் கல்வி அமைச்சர் இன்னும் இரண்டு நாட்களில் ஆசிரியர் பணியிட மாறுதலுக்கான கவுன்சிலிங் அறிவிப்பு வெளியிடப்படும் என பள்ளிக் கல்வி அமைச்சர் தெரிவித்தார். கலந்தாய்வு முடிந்த உடன் காலிப்பணியிடம் கணக்கிடப்பட்டு ஆசிரியர்கள் பணி நியமனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.
  தமிழகத்தில் 10, 12ஆம் வகுப்புகளுக்கு முதல்கட்ட திருப்புதல் தேர்வு அறிவிப்பு தமிழகத்தில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான முதல்கட்ட திருப்புதல் தேர்வுக்கான தேதியை தேர்வுத்துறை செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது. ஒமைக்ரான் பரவல் அதிகரிப்பால் இந்த கல்வியாண்டிற்கான பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுமா என்ற கேள்வி எழுந்த நிலையில், அடுத்தாண்டு மே மாதத்தில் பொதுத் தேர்வுகள் கட்டாயம் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று தெரிவித்திருந்தார். இந்நிலையில், தமிழக தேர்வுத்துறை வெளியிட்ட செய்தியில், 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரையும், 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 20ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரையும் முதல்கட்ட திருப்புதல் தேர்வுகள் நடைபெறும்.
  தமிழக அரசின் பல்வேறு துறைகளில் 2022-ம் ஆண்டில் டிஎன்பிஎஸ்சி மூலமாக 12,263 பணியிடங்களுக்கு ஆள் தேர்வு: குரூப்-2, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் தமிழக அரசின் பல்வேறு துறைகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் 2022-ம் ஆண்டு 12,263 காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் குரூப்-2,குரூப்-2ஏ, குரூப்-4 பதவிகளில் மட்டும் 11,086 காலி இடங்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது. தமிழக அரசின் பல்வேறு துறைகளுக்கு தேவைப்படும் பணியாளர்கள், அலுவலர்கள் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாக தேர்வு செய்யப்படுகின்றனர். இதற்காக டிஎன்பிஎஸ்சி அவ்வப்போது போட்டித் தேர்வுகளை நடத்தி, தகுதியான நபர்களை தேர்வு செய்துஅரசு துறைகளுக்கு வழங்குகிறது. ஓராண்டில் எந்தெந்த அரசு பணிகளுக்கான தேர்வு அறிவிக்கை எப்போது வெளியிடப்படும், எப்போது தேர்வு நடக்கும், தேர்வு முடிவுகள், நேர்காணல் எப்போது நடைபெறும் என்ற விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வுக் கால அட்டவணையை (Annual Planner) டிஎன்பிஎஸ்சி ஆண்டுதோறும் வெளியிட்டு வருகிறது. அரசு பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிப்பதற
  குரூப் 4 பாடத்திட்டம் விரைவில் வெளியீடு - TNPSC தகவல் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் குரூப் 4 தேர்வு தேர்வு குறித்த திருத்தப்பட்ட எவ்வித பாடத்திட்டத்தையும் இதுவரை வெளியிடப்படவில்லை என தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தமிழ்மாெழியில் தகுதிப் பெற்றால் மட்டுமே பணியில் கலந்துக் கொள்ள முடியும் என அறிவித்தது. மேலும் தமிழ்மாெழியில் 40 மதிப்பெண்கள் பெறுபவர்கள் மட்டுமே தகுதிப்பெற்றர்களாகவும் அறிவிக்கப்படும் என தெரிவித்தது. இந்த நிலையில் குரூப்-4 தேர்வில் முந்தைய ஆண்டு பழைய பாடத் திட்டத்தில் பொது ஆங்கில பாடம் இடம்பெற்றது . அரசு கொண்டு வந்துள்ள புதிய மாற்றத்தின் அடிப்படையில் குரூப் 4 தேர்வில் பொது ஆங்கில பாடம் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பழைய பாடத்திட்டத்திலிருந்து புதிய பாடத்திட்டம் எவ்வாறு மாறுபடும் என்பதை சுட்டிகாட்ட பழைய பாடத்திட்ட முறை இணையதளத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. பொது ஆங்கில பாடம் மீண்டும் கொண்டுவரப்பட்டதா என்கிற குழப்பம் தேர்வர்களுக்க்கு ஏற்பட்டது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரி ஒருவர் கூறும்போது, இனையதளத்