Posts

Showing posts from December 26, 2021
  புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் குரூப் 'பி', 'சி' வேலைவாய்ப்புகள்: விண்ணப்பிப்பது எப்படி? மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் கீழ் புதுச்சேரியில் செயல்பட்டு வரும் ஜிப்மர் மருத்துவமனையில் நிரப்பப்பட உள்ள குரூப் 'பி', 'சி' பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பர எண்.Admn-I/DR/I(1)2021 பணி: Medical Laboratory Technologist(Group-B) காலியிடங்கள்: 12 சம்பளம்: மாதம் ரூ. 35,400 தகுதி: Medical Laboratory Science-இல் இளநிலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Junior Administrative Assistant காலியிடங்கள்: 08 சம்பளம்: மாதம் ரூ.19,900 தகுதி: பிளஸ் 2 தேர்ச்சியுடன் நிமிடத்திற்கு ஆங்கிலத்தில் 35 வார்த்தைகளும், இந்தியில் 30 வார்த்தைகளும் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும். பணி: Junior Administrative Assistant காலியிடங்கள்: ...
  B.Ed கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புது கட்டுப்பாடு. பி.எட். கல்லுாரி ஆசிரியர்களின் தேர்வு பணிக்கு புதிய கட்டுப்பாடு விதிக்கப் பட்டு உள்ளது. தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலை கட்டுப்பாட்டில் பி.எட். பட்டப்படிப்பை நடத்தும் 650க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லுாரிகள் செயல்படுகின்றன. இவற்றில் அவ்வப்போது ஆசிரியர்களை மாற்றி மாற்றி நியமிப்பதால் தேர்வு பணிகளில் சுணக்கம் ஏற்படுகிறது. மேலும் மாணவர்களின் விடைத்தாள்களை திருத்துவதிலும் நம்பகத்தன்மை இல்லாத சூழல் நிலவுகிறது. இதை கருத்தில் கொண்டு பி.எட். கல்லுாரிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து பல்கலை தேர்வு கட்டுப்பாட்டு பிரிவு பொறுப்பு அதிகாரி கோவிந்தன் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:ஆசிரியர் கல்வியியல் பல்கலையின் இணைப்பு அங்கீகாரம் பெற்றுள்ள கல்வியியல் கல்லுாரிகள் தங்கள் நிறுவனத்தில்பணி அமர்த்தியுள்ள ஆசிரியர்களின் விபரங்களை இ- - மெயில் வாயிலாக பல்கலைக்கு அனுப்ப வேண்டும். கல்லுாரிகள் அளிக்கும் ஆசிரியர் விபரங்களை ஆய்வு செய்து அவர்களின் தகுதி அடிப்படையில் மட்டுமே பல்கலையின் செய்முறை தேர்வு மற்றும் மாணவர்களின் விடை...
  குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் சேர்ப்பு: டிஎன்பிஎஸ்சி செயலாளர் உமாமகேஸ்வரி தகவல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வில் திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல் பகுதி சேர்க்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) செயலாளர் உமா மகேஸ்வரி வெளியிட்ட அறிவிப்பு: பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான கட்டாயத் தமிழ் மொழி தகுதித் தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து அதற்கான தேர்வுத்திட்டம், பாடத்திட்டம் ஆகியவை தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. கட்டாயத் தமிழ் மொழித் தகுதித் தேர்வு பாடத் திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (விரிந்துரைக்கும் வகை). கட்டாயத் தமிழ்மொழித் தகுதித் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை). கட்டாயத் தமிழ்மொழித் தகுதி மற்றும் மதிப்பீட்டுத் தேர்வு பாடத்திட்டம் மற்றும் மாதிரி வினாத்தாள் (கொள்குறிவகை) வெளியிடப்பட்டுள்ளன. இவற்றில் விரிந்துரைக்கும் வகை தமிழ் மொழித் தகுதித்தேர்வில் (குரூப் 2, குரூப் 2ஏ உட்பட) திருக்குறள் தொடர்பான கட்டுரை வரைதல்'' எனும் பகுதி சேர்க்கப்பட்டு, திருத்தப்பட்ட பாடத்திட்ட...