Posts

Showing posts from December 22, 2021
  2 ஆண்டுகளாக நடத்தப்படாத ஆசிரியர் தகுதித்தேர்வு: புதிய தேர்வு அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கும் ஆசிரியர்கள் தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளாக ஆசிரியர் தகுதித்தேர்வு நடத்தப்படாததால் புதிய தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும் என இடைநிலை ஆசிரியர் பயிற்சியை முடித்தவர்களும் பிஎட் பட்டதாரிகளும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். டெட்', 'சி-டெட்' தேர்வுகள் மத்திய அரசு கொண்டுவந்த இலவச, கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின்படி, பள்ளிகளில் ஒன்றாம்வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரைபணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களும், பட்டதாரி ஆசிரியர்களும் 'டெட்' எனப்படும் ஆசிரியர் தகுதித்தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல், சிபிஎஸ்இ பாடத்திட்டம் உள்ள மத்திய அரசு பள்ளிகள், கேந்திரிய வித்யாலயா பள்ளிகள், நவோதயா பள்ளிகளில் பணியாற்ற சி-டெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித்தேர்வு தேர்ச்சி அவசியம். சி-டெட் தேர்வைமத்திய அரசு சார்பில் சிபிஎஸ்இ நடத்தி வருகிறது. தமிழகத்தில் டெட் தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்துகிறது. டெட் தேர்வில் மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் இடம்பெ...