" புகாரில் சிக்கிய ஆசிரியர்களுக்கு புரமோஷன் கிடையாது" - பள்ளிக்கல்வி துறை அதிரடி ஆர்டர்! தமிழ்நாட்டில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான மாறுதல் கலந்தாய்வை புதிய விதிகளின்படி நடத்த பள்ளிக்கல்வி துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் அரசுப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர் பணிக்கான பதவி உயர்வு பட்டியலைத் தயாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு பள்ளிக் கல்வி இயக்குநரகம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி பதவி உயர்வுக்கு ஆசிரியர்கள் பட்டியல், துறை இயக்குநரகத்தில் சமர்பிக்கப்பட்டுள்ளன. அந்தப் பட்டியலை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அதில், ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளான ஆசிரியர்கள், புகார் மீதான விசாரணை நிலுவையில் உள்ளவர்களின் பெயர்களும் இடம்பெற்றுள்ளது கண்டறியப்பட்டது. இதையடுத்து, புகாரில் சிக்கியவர்களை பதவி உயர்வு பட்டியலிலிருந்து நீக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இதுதொடர்பாக பள்ளிக் கல்வி இயக்குநரகம் சார்பில் முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள கடிதத்தில், "பதவி உயர்வு பட்டியலில் ஒழுங்கு நடவடிக்கைக்கு உள்ளானவர்களின் பெயர்களை விடுவி...
Posts
Showing posts from December 19, 2021
- Get link
- X
- Other Apps
புதிய ஆசிரியா்கள் ஒரே பள்ளியில் 8 ஆண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும்: இடமாறுதல் விதிமுறைகள் வெளியீடு இனி புதிதாக பணி நியமனம் செய்யப்படும் ஆசிரியா்கள் எட்டாண்டுகள் கட்டாயம் ஒரே இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதன் பின்னா் அவா்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படுவா் என ஆசிரியா் பணியிட மாறுதல் கலந்தாய்வுக்கான விதிமுறைகள் அடங்கிய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா வெளியிட்ட அரசாணை: அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியா்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இட மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-2022- ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்த பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு, வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவா்கள்-ஆசிரியா்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1ஆம் தேதி ஆசிரியா்கள் - மாணவா்கள் விகிதாசார அடிப்படையில், காலிப்பணியிடங்கள் நிா்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியா் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம்...