Posts

Showing posts from December 14, 2021
Image
  TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாளை பதிவிறக்கம் செய்வது எவ்வாறு?     TRB - பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வுக்கான வினாத்தாள் பதிவிறக்கம் செய்தல் சார்பான செய்தி வெளியீடு! 2017-2018ஆம் ஆண்டு அரசு பல்தொழில்நுட்ப கல்லுாரி விரிவுரையாளர் நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை ( Notification ) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 27.11.2019 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் ( Computer Based Examination ) கடந்த 08.12.2021 முதல் 13.12.2021 வரை நடைபெற்றது.  இத்தேர்வில் பங்கேற்ற தேர்வர்கள் தமது வினாத்தாள் மற்றும் தாம் பதில் அளித்த விடைகளை பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி பதிவிறக்கம் செய்துகொள்ளும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது என தெரிவிக்கலாகிறது. Candidates who have appeared for the exam can download using the Step given below :  1. Go to : https://trbpolviewap.onlineapplication form.org/ObjectionTracker PortalWeb / loginPage.jsp  2. Enter Registration Number  3. Select Date of Birth  4. Select Date of Exam  5. Select Bat...
  ஜனவரி 5ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு. தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது.  இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடரில் அடுத்து பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும், பிறகு மானியக்கோரிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையின் தொடர் முயற்சிகளில் கிட்டத்தட்ட 83% நபர்களுக்கு தமிழகத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவ...
  சுழற்சி முறை வகுப்பு ரத்து- 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை பள்ளிகள் ஜனவரி 3 முதல் இயல்பு நடைமுறைப்படி செயல்படும்  தமிழ்நாட்டில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை டிசம்பர் 31 ஆம் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தமிழ்நாட்டில் கொரோனா நோய் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் 15-12-2021 வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு நடைமுறையில் இருந்து வருகிறது. பண்டிகைக் காலங்களில் கொரோனா நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் தற்போது அண்டை மாநிலங்களில் பரவிவரும் உருமாறிய கொரோனா- ஒமிக்ரான் வைரஸ் நோயை கருத்தில் கொண்டும் தடுப்பூசி செலுத்தும் பணியினை விரைவுப்படுத்தவும், தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.   ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சகத்தின் 30-11-2021 நாளிட்ட அறிக்கையின்படி, கொரோனா நோய் தடுப்பு கட்டுப்பாடுகள் 31-12-2021 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கொரோனா நோய்த் தொற்று பரவலை தடுக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வகையிலும், பரவி வரும் உருமாறி...
  ஸ்கூல்ல 2 டீச்சர்தான் இருக்காங்க.. மாணவி கொடுத்த புகார்.. ஆக்‌ஷனில் இறங்கிய மாவட்ட ஆட்சியர் மாணவி கொடுத்த புகாரையடுத்து மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் ஒன்றியம் பூங்குளம் பகுதியில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது. இப்பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை சுமார் 190 மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த நிலையில் 9 ஆசிரியர் தேவைப்படும் இப்பள்ளியில் 2 ஆசிரியர்கள் மட்டுமே பணியாற்றி வருகின்றனர். அதிலும் ஒருவர் தலைமை ஆசிரியராக உள்ளார். எனவே 190 மாணவ மாணவிகளுக்கு இரண்டு ஆசிரியர்களால் போதிய கல்வி கற்றுத்தர முடியவில்லை எனக் கூறியும் உடனடியாக ஆசிரியர்களை பணி அமர்த்த ஆவணம் செய்ய வேண்டும் எனவும் ஐந்தாம் வகுப்பு மாணவி சாதனா இன்று காலை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். வேண்டும் வேண்டும் ஆசிரியர் வேண்டும் என்ற பதாகையை கையில் ஏந்திய படி மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனுக்கொடுத்தார். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் பள்ளிக்கு வந்து ஆய்வு செய்வதாக வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து உடனடியாக பூங்குளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிக...