Posts

Showing posts from December 5, 2021
  பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள்.. தமிழக அரசுக்கு வேல்முருகன் முக்கிய கோரிக்கை   தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் வெளிமாநிலத்தவர்கள் பங்கேற்பதை தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு தமிழக வாழ்வுரிமைக் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது இது தொடர்பாக அந்த கட்சியின் தலைவர் வேல்முருகன் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:- தமிழ்நாட்டில் காலியாக உள்ள 1,060 பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கு தேர்வு வரும் 8 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இத்தேர்வை, ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 140 பேர் தேர்வு எழுதுகின்றனர். தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது கடந்த 2017 ஆம் ஆண்டு, இதே பணியிடங்களுக்காக நடந்த தேர்வில், தமிழ் தெரியாத வெளி மாநிலத்தவர் பெருமளவில் தேர்வானதை தமிழக வாழ்வுரிமைக் கட்சி அம்பலப்படுத்தியதோடு, வெளி மாநிலத்தவரை நீக்கிவிட்டு புதிய பட்டியலை வெளியிட வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து, வெற்றி பெற்றோருக்கு 2017 நவம்பர் 23 அன்று நடக்கவிருந்த சான்றிதழ் சரிபார்ப்பை தமிழ்நாடு அரசு ஒத்தி வைத்தது....
  6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: 6 லட்சம் அரசு பணியிடங்கள் காலி: நிதியமைச்சர் பழனிவேல் அறிவிப்பு அரசு துறைகளில், ஆறு லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. முதல்வருடன்ஆலோசித்து, அரசு பணியாளர் தேர்வு, பதவி உயர்வு தொடர்பாக பல முடிவுகளை எடுக்க உள்ளோம். ஓய்வு பெறும் வயதிலும் மாற்றம் வரலாம்,'' என, தமிழக நிதி அமைச்சர்தியாகராஜன் தெரிவித்தார்.சென்னையில், நேற்று அவர் அளித்த பேட்டி: மனித வள மேலாண்மை துறை மானிய கோரிக்கையின் போது, 'தமிழ் மொழி தேர்வில் குறைந்தது, 40 சதவீத மதிப்பெண் பெற்ற வர்களுக்கு தான், அரசு பணி வாய்ப்பு வழங்கப்படும்' என்று அறிவிக்கப் பட்டது.இது குறித்து, பல விவாதங்கள் நடத்தி, சட்ட வல்லுனர்களுடன் ஆலோசித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.அரசின் பணிஇனிமேல், தமிழக அரசு பணிக்கு, எந்த தேர்வு முகமை தேர்வை நடத்தினாலும், தமிழ் புலமை, தமிழகம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும்.அதில், 40 சதவீத மதிப்பெண் பெற்றதால் தான், மற்ற தேர்வு தாள்கள் திருத்தப்படும்.டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் - 4' போன்ற தேர்வுகளில், ஆங்கில மொழித்தாள் நீக்கப்படும்; தமிழ் மொழித்தாள் மட்டுமே இடம் ப...