Posts

Showing posts from December 3, 2021
  புதுச்சேரியில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை மாணவர்களுக்கு டிசம்பர் 6-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் அறிவித்துள்ளார். ஏற்கனவே பள்ளிகளை திறக்க முடிவு செய்தபோது மழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு ஒத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன்படி தற்போது தினமும் அரை நாள் மட்டும் வகுப்புகள் நடக்கும் என்றும், விருப்பமுள்ள மாணவர்கள் நேரடி வகுப்புகளில் வந்து கலந்து கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக புதுச்சேரியில் நவம்பர் 8-ஆம் தேதி முதல், ஒன்றாம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், கனமழை மற்றும் வெள்ளம் காரணமாக பள்ளிகள் திறப்பு திடீரென ஒத்திவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
  தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம்: அரசாணை வெளியீடு. தமிழ்நாடு இளைஞர்களுக்கு 100% வேலை, போட்டித்தேர்வுகளில் தமிழ் பாடத்தாள் கட்டாயம் என அறிவிக்கப்பட்ட நிலையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழி தகுதித்தேர்வுக்கான பாடத்திட்டம் 10ம் வகுப்பு தரத்தில் நிர்ணயிக்கப்படும். பணி நியமனத்துக்காக நடத்தப்படும் தமிழ் மொழித்தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்சம் 40 மதிப்பெண் பெற வேண்டும். தமிழ் மொழித் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களின் இதர போட்டி தேர்வுத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட மாட்டாது. குரூப் I, II, II-ஏ ஆகிய இரு நிலைகளை கொண்ட தேர்வுகளை தமிழ் மொழித் தகுதித்தேர்வு விரித்துரைக்கும் வகையில் நடத்தப்படும். குரூப் III, IV ஆகிய தேர்வுகளில் பொது ஆங்கில தாள் நீக்கப்பட்டு பொது தமிழ் மொழித்தாள் மட்டுமே மதிப்பீட்டு தேர்வாக இருக்கும். கடந்த ஆட்சியில் மின்வாரியம், பொதுப்பணித்துறை, நியமனத்தில் தமிழே தெரியாத வெளி மாநிலத்தவர்கள் பணியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. தமிழ் தெரியாதவர்கள் இனி தமிழ்நாட்டில் அரசுப்பணியில் சேர்வதை தடுக்க கட்டாய தமிழ் தேர்வு ஆணை ப...
  வேலைவாய்ப்புப் பதிவை புதுப்பிக்க மேலும் 3 மாதங்கள் அவகாசம் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவினை புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு மேலும் மூன்று மாதங்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடா்பாக தொழிலாளா் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு: வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து, கடந்த 2017 முதல் 2019 வரையிலான ஆண்டுகளில் புதுப்பிக்கத் தவறியவா்களுக்கு ஏற்கெனவே மூன்று மாத கால அவகாசம் அளிக்கப்பட்டது. இந்த அவகாசத்தை நீட்டிக்க வேண்டுமென்ற கோரிக்கைப்படி கால அவகாசம் நீட்டித்து வழங்கப்படும் என சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்டது. இந்த அறிவிப்பைச் செயல்படுத்தும் வகையில், சிறப்பு புதுப்பித்தல் சலுகை வழங்கி உத்தரவு வெளியிட வேண்டுமென வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் தரப்பு அரசைக் கேட்டுக் கொண்டது.  இதனைக் கவனமுடன் ஆராய்ந்த தமிழக அரசு, கடந்த 2014 முதல் 2016-ஆம் ஆண்டுகளில் வேலைவாய்ப்புக்கான பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு சிறப்பு புதுப்பித்தல் சலுகையும், 2017 முதல் 2019 வரையில் பதிவினை புதுப்பிக்கத் தவறியோருக்கு மூன்று மாதங்கள் சிறப்பு கால அவகாசம...