Posts

Showing posts from November 27, 2021
  அரசுப் பள்ளிகளில் 2,774 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை தற்காலிக அடிப்படையில் நிரப்பிக் கொள்ள பள்ளிக்கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அரசாணையில், "நடப்பு கல்வியாண்டில் (2021-22) அரசு மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள 2,774 முதுநிலை ஆசிரியர் காலி பணியிடங்களை பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் (PTA) மூலம் நிரப்பிக்கொள்ள அனுமதி கோரி பள்ளிக்கல்வி ஆணையர் கருத்துரு அனுப்பியுள்ளார்.   அதையேற்று பள்ளிகளில் காலியாக உள்ள முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை தகுதியான பட்டதாரிகள் மூலம் நிரப்பிக் கொள்ள தலைமை ஆசிரியர்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அதன்படி பள்ளியின் தலைமையாசிரியர், உதவித் தலைமையாசிரியர் மற்றும் மூத்த முதுநிலை ஆசிரியர் ஆகியோர் கொண்ட குழு மூலம் ஒப்பந்த அடிப்படையில் காலி பணியிடங்களை நிரப்பிக் கொள்ளலாம். அத்தகைய முதுநிலை ஆசிரியர்கள் 5 மாதங்களுக்கு அல்லது நேரடி நியமனம் அல்லது பதவி உயர்வு மூலம் அந்த பணியிடங்கள் நிரப்பப்படும் வரை மட்டும் பணியில் நீடிக்க வேண்டும். தற்காலிக ஆசிரியர்களுக்கு மாதம் ரூ.10 ஆயிரம் தொகுப்பூதியமாக வழங்கப்படும். இதற்காக 5 மாதங்களுக்கு தேவையான ...
  எழுத முடியாமல் மாணவர்கள் தடுமாற்றம்! இந்த கொரோனா பாதிப்புக்கு கல்வித்துறை தீர்வு கோவை: பள்ளிகள் நீண்ட இடைவெளிக்கு பின்பு திறக்கப்பட்டுள்ள சூழலில், பல மாணவர்கள் பேனாவை பிடித்து எழுதுவதில் தடுமாற்றம் அடைவது கண்டறியப்பட்டுள்ளது. கடந்த 2020 மார்ச் முதல் பள்ளிகள் மூடப்பட்டு, செப்., 1ம் தேதி திறக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றதால், எழுத்து பயிற்சி என்பது மாணவர்களுக்கு சுத்தமாகவே இல்லாத நிலை ஏற்பட்டது.பொதுவாகவே பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, நேர மேலாண்மையுடன் ஒருங்கிணைந்து மாதிரி எழுத்து பயிற்சிகள் ஆரம்பம் முதலே வழங்கப்படும்.பாடவாரியாக தினந்தோறும் பயிற்சி தேர்வுகள் நடத்தப்படும். இதனால், பொதுத்தேர்வு சமயத்தில் மாணவர்களுக்கு எழுதுவதற்கு சிரமங்கள் இருப்பதில்லை. தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ்1, பிளஸ்2 மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சிகள் முடித்து கடந்த, 20 நாட்களாக நடப்பாண்டுக்கான பாடங்கள் துவக்கப்பட்டு கற்பித்தல் பணி நடந்து வருகின்றன.பயிற்சிக்கான தினத்தேர்வுகளும் துவக்கப்பட்டுள்ளன. இதில், பெரும்பாலான மாணவர்கள் பேனாவை பிடித்து முழுமையாக ஒரு மணி நேரம் கூட எழுத முடியாமல்...
   கனமழை காரணமாக இன்று (27.11.2021) 23 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட விவரம் : 1. திருவாரூர் ( பள்ளி ,  கல்லூரி )  2. தூத்துக்குடி விடுமுறை  ( பள்ளி ,  கல்லூரி )  3. புதுக்கோட்டை   ( பள்ளி ,  கல்லூரி )  4. நெல்லை  ( பள்ளி ,  கல்லூரி )  5. நாகை  ( பள்ளி ,  கல்லூரி )  6. அரியலூர்  ( பள்ளி ,  கல்லூரி )  7. பெரம்பலூர் ( பள்ளி ,  கல்லூரி )  8. காஞ்சிபுரம்  ( பள்ளி ,  கல்லூரி )  9.  திருவள்ளூர்  ( பள்ளி ,  கல்லூரி )  10. தஞ்சாவூர் ( பள்ளி ,  கல்லூரி )  11. திருச்சி  ( பள்ளி ,  கல்லூரி )  12. சென்னை ( பள்ளி ,  கல்லூரி )  13. ராமநாதபுரம் ( பள்ளி ,  கல்லூரி )   14. செங்கல்பட்டு  ( பள்ளி ,  கல்லூரி )  15. கடலூர் ( பள்ளி ,  கல்லூரி )  16. விழுப்புரம் ( பள்ளி ,  கல்லூரி )  17. சேலம்  ( பள்ளி ,  கல்லூரி )  18. திருவண்ணாமலை  ( பள்ளி ...