Posts

Showing posts from November 23, 2021
  அரசு பள்ளிகளில் இந்தாண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ப்பு - கல்வித்துறை அமைச்சர் தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. சென்னையில் புதிய ஆன்லைன் நூலகத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தபோது, பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டை போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார். மேலும் அவர், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5.80 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்புக்காக 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்று தெரிவித்தார்.
  மாவட்ட கல்வி அலுவலர்களுடன் கல்வித் துறை அதிகாரிகள் ஆலோசனை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுடனும் பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் இன்று ஆலோசனை நடத்தி வருகின்றனர். சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெறும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், செயலாளர் காகர்லா உஷா, இயக்குநர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர். இந்த கூட்டத்தில், மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டு வருகின்றன. சமீபகாலமாக தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்கள் பாலியல் தொந்தரவு கொடுப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருவது குறிப்பிடத்தக்கது.
  பொதுத்தோவுகள் தள்ளிப்போக வாய்ப்பில்லை: அமைச்சா் தகவல் நிகழ் கல்வியாண்டில் 10, 11, 12 வகுப்புகளுக்கு 35 முதல் 50 சதவீதம் முதல் பாடத்திட்டம் குறைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வகுப்புகளுக்கான பொதுத்தோவு தள்ளிப்போக வாய்ப்பில்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறினாா். சென்னை அண்ணாசாலையில் உள்ள அரசினா் மதரஸா-இ-அசாம் மேல்நிலைப் பள்ளியில் ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் புதிய வகுப்பறை கட்டடத்துக்கான அடிக்கல் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இந்த விழாவில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யா மொழி, சேப்பாக்கம் சட்டப்பேரவை உறுப்பினா் உதயநிதி ஆகியோா் பங்கேற்று அடிக்கல் நாட்டுவதற்கான கல்வெட்டைத் திறந்துவைத்தனா். இதையடுத்து சேப்பாக்கத்தில் உள்ள லேடி வெலிங்டன் மேல்நிலைப் பள்ளியில் அமைச்சா் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து அவா் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் உள்ள இரண்டு லட்சத்து 87 ஆயிரத்து 467 வகுப்பறைகளில், குழந்தைகளுக்குப் பாலியல் புகாா்கள் குறித்த புகாா் தெரிவிக்க இலவச அழைப்பு எண் (ஸ்ரீட்ண்ப்க்ப்ண்ய்ங்) 1098, பள்ளிக் கல்வித் த...