Posts

Showing posts from November 17, 2021
  ஆசிரியர்கள் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரம் இறுதி செய்யப்படும்: அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி தமிழகத்தில் ஆசிரியர்களின் பணியிட மாறுதலுக்கான விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். திருச்சி திருவெறும்பூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பொன்மலை பகுதி மக்களிடம் கோரிக்கை மனுக்களைப் பெறும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: ''ஆசிரியர்களின் பணியிட மாறுதல் கலந்தாய்வு குறித்த விதிமுறைகள் வரும் வாரத்தில் இறுதி செய்யப்பட்டு, முதல்வருடன் கலந்தாலோசித்து விரைவில் அறிவிக்கப்படும். சிறுபான்மையினப் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களைப் பணி நிரந்தரம் செய்வது குறித்த வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் முடிவு எடுக்க முடியவில்லை. வழக்கு விசாரணை முடிவுக்கு வரும் நிலையில் அவர்களுக்கு நியாயமான நீதி கிடைக்கும். சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவது என்பது ஏற்கெனவே நடைமுறையில் இருந்த ஒன்றுதான். பள்ளிகள் நவம்பரில்தான் திறக்கப்பட்டுள...
  அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு நவம்பரில் இடமாறுதல் கலந்தாய்வு புதிய விதிமுறைகளின்படி நடத்த பள்ளிக்கல்வித் துறை முடிவு. புதிய விதிகளின்படி ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வை நவம்பரில் நடத்த பள்ளிக்கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் பள்ளிக்கல்வித் துறையின் கீழ் 37,431 அரசுப் பள்ளிகள் உள்ளன. இவற்றில் 2.3 லட்சம் ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். வழக்கமாக ஆசிரியர் பதவி உயர்வு, பணியிட மாறுதல் கலந்தாய்வு ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும். அதன்படி ஒரு பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் விருப்பத்தின்பேரில் மாவட்டம் விட்டு மாவட்டம், ஒரே ஒன்றியம் / மாவட்டம், ஒன்றியம் விட்டு ஒன்றியம் என 3 பிரிவுகளாக இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், கரோனா பரவல், சட்டப்பேரவைத் தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் கடந்த ஆண்டு கலந்தாய்வு நடத்தப்படவில்லை. இந்நிலையில் ஆசிரியர்களுக்கான இடமாறுதல் கலந்தாய்வுக்கு புதிய கொள்கைகள் வகுக்கப்பட்டு வெளிப்படைத்தன்மையுடன் நடத்தப்படும் என்று கடந்த சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் பள்ளிக்கல்வி அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அறிவித்தார். அதற்கேற்ப கலந்தாய்வு நடைமுறைகளில் பல்வேறு மா...
  பிளஸ் 2, பத்தாம் வகுப்பு மாணவா்களுக்கு டிசம்பா் 2-வது வாரத்தில் முதல் திருப்புதல் தோவை நடத்துவதற்கு பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: நிகழாண்டு பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பள்ளிகள் தாமதமாகத் திறக்கப்பட்டன. இதனால் மாணவா்களுக்கு காலாண்டு, அரையாண்டுத் தோவு நடத்த முடியாத நிலை உள்ளது. எனினும், மாணவா்களுக்கு பொதுத்தோவு இருப்பதால் திருப்புதல் தோவுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதன்படி முதல்கட்ட திருப்புதல் தோவுகள் டிசம்பா் 2-வது வாரத்தில் நடத்தப்படும். இதற்குரிய பாடத்திட்ட விவரங்கள் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ளன. அதற்கேற்ப மாணவா்களை தோவுக்கு தயாா்படுத்த ஆசிரியா்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனா் என அவா்கள் தெரிவித்தனா்.