Posts

Showing posts from November 14, 2021
 தமிழக மாணவ, மாணவிகள் எப்போதும் 14417 என்ற எண்ணை அழைக்கலாம்.. அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!!! தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பள்ளி மாணவிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு வரும் சம்பவம் அதிக அளவு நடந்து கொண்டிருக்கிறது. அதனால் ஒரு சில மாணவிகள் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து அனைத்து பள்ளிகளிலும் மாணவிகள் பாதுகாப்பை உறுதி செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. அதற்காக அனைத்து பள்ளிகளிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டது. இந்நிலையில் போக்சோ சட்டம் தொடர்பான விழிப்புணர்வை தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு எந்த பிரச்சனையாக இருந்தாலும் உதவி எண் 14417- ஐ அழைக்கலாம் என்று கூறியுள்ளார்.கோவையில் பாலியல் தொல்லையால் தற்கொலை செய்துகொண்ட மாணவியின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்த நிலையில் அமைச்சர் இதைக் கூறியுள்ளார்.
  இல்லம் தேடி கல்வி’ திட்டத்தில் பணிபுரிய இதுவரை 1.61 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பித் துள்ளனர். கரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பில்தாமதம் ஏற்பட்டது. இந்த காலகட்டத்தில் கல்வித் தொலைக்காட்சி மற்றும் இணையவழியில்தான் மாணவர்களுக்குப் பாடங்கள் நடத்தப்பட்டன. எனினும், அவை நேரடிக் கற்பித்தலுக்கு இணை இல்லாததால், பெரும்பாலான குழந்தைகளின் கற்றலில் தேக்கநிலை ஏற்பட்டது கண்டறியப்பட் டது. இதையடுத்து, 1 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம் ஏற்பட்டுள்ள கற்றல் இடைவெளியைச் சரிசெய்ய ‘இல்லம் தேடி கல்வித் திட்டம்’ என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது. பெண்கள் ஆர்வம் இந்த திட்டத்தின்படி, பள்ளி நேரத்துக்குப் பின், மாலை நேரங்களில் தன்னார்வலர்கள் மூலம் மாணவர்களுக்கு கற்பிக்க முடிவு செய்யப்பட்டு, இதில் பணிபுரிய விருப்பமுள்ள தன்னார்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என்று பள்ளிக்கல்வித் துறை கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது. இதையடுத்து, ஏராளமானோர் இந்தப்பணிக்கு ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை 1.61 லட்சம் தன்னார்வலர்கள் விண்ணப்பித்துள்ளதாகவும், அவர்களில் 1.3 லட்சத்துக்கும் மேற