பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர் போட்டி தேர்வு அட்டவணை வெளியீடு அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியான விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.இந்நிலையில் வருகின்ற டிசம்பர் மாதம் போட்டி தேர்வு நடத்த உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அறிவித்துள்ளார். அதாவது டிசம்பர் 8-ஆம் தேதி முதல் 12ம் தேதி வரை கணினி வழியாக தேர்வு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான போட்டித் தேர்வு அட்டவணையை ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அதிகாரபூர்வ இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.பாலிடெக்னிக் விரிவுரையாளர் போட்டித்தேர்வு விண்ணப்பித்தவர்களுக்கு ஹால் டிக்கெட்டுகள் தேர்வு நடைபெறுவதற்கு ஒரு வாரம் முன்னதாக இணையதளத்தில் வெளியிடப்படும். போட்டித் தேர்வுக்கு தயாராகி வரும் நபர்களுக்கு இந்த அறிவிப்பு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.தேர்வு நடைபெறும் தேதிகள் நிர்வாக வசதிகளைப் பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்விற்கு தங்களை தீவிரமாக தயார்படுத்தி வருகின்றனர். * டிசம்பர் 8 - (காலை) இயற்பியல், பிரிண்டிங் டெக், டெக்ஸ்டைல் தொழில்நுட்பம், தகவல...