Posts

Showing posts from November 11, 2021
  இல்லம் தேடி கல்வி: தன்னார்வலர்கள் தேர்வு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது. இந்த திட்டமானது மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நலனளிக்கும் திட்டமாக உள்ளது. கொரோனா பெருந்தொற்றுப் (Coronavirus) பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள முடிவு செய்ய்யப்பட்டது. 'இந்த திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், தொடர்ச்சியாக வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் (Tamil) தெரிந்திருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். இந்த ஆர்வலர்களுக்கு குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருக்க வேண்டும்' என்ற நிபந்தனைக...
  கனமழை காரணமாக இன்று (12.11.2021) 11 மாவட்ட பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு. 1.சென்னை  2.காஞ்சிபுரம் 3.செங்கல்பட்டு 4. திருவள்ளூர் 5.திருவண்ணாமலை  6.கடலூர்( பள்ளிகளுக்கு மட்டும்) .7. விழுப்புரம் ( பள்ளிகளுக்கு மட்டும்) 8.வேலூர் 9. ராணிப்பேட்டை( பள்ளிகளுக்கு மட்டும்) 10.நீலகிரி 11. சேலம் ( பள்ளிகளுக்கு மட்டும்)
  பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று மகிழ்ச்சியூட்டும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார் கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழகத்தில் அரசு பள்ளிகளில் கடந்த 2012 ஆம் ஆண்டு 16,549 பகுதி நேர ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். இவர்கள் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல், தோட்டக்கலை, கட்டிடக்கலை மற்றும் வாழ்க்கை கல்வி ஆகிய எட்டு பாடங்களை பகுதி நேரமாக மாணவர்களுக்கு கற்பித்து வருகிறார்கள். அவர்கள் அனைவருக்கும் மாதம் ஐந்தாயிரம் ரூபாய் சம்பளம் வழங்கப்பட்டு வந்த நிலையில், படிப்படியாக உயர்த்தப்பட்டு 10 ஆண்டுகளில் 10 ஆயிரம் ரூபாய் வரை மாத சம்பளம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் பகுதி நேர ஆசிரியர்கள் 12 ஆயிரம் பேர் மட்டுமே தற்போது பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்த நிலையில், திமுக தேர்தல் அறிக்கையில் பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி ...
Image
  பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர்: அமைச்சர் அன்பில் மகேஷ் தமிழ்நாட்டில் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்துள்ளார். பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு, முழு ஆண்டு தேர்வுக்கு பதிலாக திருப்புதல் தேர்வு நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்
Image
 இன்று (11-11-2021)கனமழை காரணமாக 20 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு 
 தேர்வு முறைகேடு வெட்கக்கேடான நிகழ்வு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை TNPSC - குரூப்-4 தேர்வு முறைகேடு வெட்கக்கேடான நிகழ்வு - உயர் நீதிமன்ற மதுரைக்கிளை மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்வி, உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினைத் தாக்கல் செய்திருந்தார். அதில், "2016ஆம் ஆண்டு தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி சார்பில் குரூப் 4 தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 5,575 மையங்களில் 16 லட்சம் பேர் எழுதினர். இதன் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதில் ராமேஸ்வரம், கீழக்கரை மையங்களில் தேர்வு எழுதியவர்கள் முதல் நூறு இடங்களில் வெற்றிப்பெற்றது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர். இந்த குரூப் 4 முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு உள்ளது. சிபிஐ விசாரித்தால்தான் முறைகேடு தொடர்பான அனைத்து உண்மைகளையும் வெளிக்கொண்டுவர முடியும். எனவே குரூப் 4 முறைகேட்டில் அனைத்து உண்மைகளையும் கண்டறியவும், நியாயமாக விசாரணை நடைபெறவும் சிபிசிஐடி போலீஸார் வசமுள்ள வழக்கு விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தா...