Posts

Showing posts from November 10, 2021
Image
கோவையில் பள்ளிகளுக்கு நாளை(11-11-2021) விடுமுறை அறிவிப்பு 
 இன்று 22 மாவட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு தமிழகத்தில் இன்றும் நாளையும் மிக அதிக கனமழை பெய்யக்கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.. இதனால் நாகை, திருச்சி, கரூர், தஞ்சாவூர், விழுப்புரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது.. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக 22 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.   சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் 2 நாட்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் நாகை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம், பெரம்பலூர், மதுரை, அரியலூர், விருதுநகர், சிவகங்கை, புதுக்கோட்டை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, கரூர் மாவட்டங்களில் இன்று மட்டும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ராமநாதபுரம், திருச்சி மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதே போல் கனமழை காரணமாக புதுச்சேரி, காரைக்காலிலும் 10,11-ம் தேதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.