முதுகலை பட்டதாரி போட்டித்தேர்வு நாளை(09-11-2021) மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம் ஆசிரியர் தேர்வு வாரியம் தகவல் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2020-21ஆம் கல்வி ஆண்டிற்கான முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் ஆகிய காலிப்பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை 09.09.2021 முதல் வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் இணைய வழி வாயிலாக 18.09.2021 முதல் பெறப்பட்டு வருகின்றன. இந்நிலையில் ஆசிரியர்களின் நேரடி நியமனத்திற்கு பணிக்காண உச்ச வயது வரம்பினை உயர்த்தி ஆணையிடப்பட்டுள்ளதால், உச்ச வயது வரம்பினை சார்ந்து மென்பொருளில் மாற்றம் செய்ய வேண்டியுள்ளதாலும், மேலும் பணிக்கு இணைய வழியில் விண்ணப்பிப்பதற்கான உரிய கால அவகாசம் அளிக்க வேண்டியுள்ளதாலும் முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர் பணியிடங்களுக்கு இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறுவதற்கான கடைசி தேதி 31.10.2021-லிருந்து 09.11.2021 மாலை 5.00 மணி வரை நீட்டித்து கடந்த 21ஆம் தேதி உத்தரவிடப்பட்டது. இதையடுத்து முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர், கணினி பயிற்றுநர...
Posts
Showing posts from November 8, 2021