Posts

Showing posts from November 7, 2021
ஆசிரியர் போட்டி தேர்வு நடத்துவதில் சிக்கல்? வன்னியர் இட ஒதுக்கீடு ரத்து விவகாரத்தால், ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டி தேர்வுகளை திட்டமிட்டபடி நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் 69 சதவீத இட ஒதுக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. இதில், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு, 20 சதவீதம் ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. இந்த ஒதுக்கீட்டில், 10.5 சதவீதம் உள்ஒதுக்கீட்டை வன்னியர் சமூகத்தினருக்கு வழங்க, அ.தி.மு.க., ஆட்சியின் போது, கடந்த பிப்ரவரியில் சட்டம் கொண்டு வரப்பட்டது. இதைத் தொடர்ந்து சட்டசபை தேர்தல் முடிந்து, தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்றதும், வன்னியர் இடஒதுக்கீடு சட்டத்துக்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. நடப்பு கல்வி ஆண்டில் இந்த சட்டத்தின்படி, மாணவர் சேர்க்கையை நடத்தி, வன்னியர் சமூக மாணவர்களுக்கு உயர்கல்வியில் 10.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இந்நிலையில், வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடுசட்டம் முறையாக கொண்டு வரப்பட வில்லை என்று தொடரப்பட்ட வழக்கில், வன்னியர்களுக்கான உள் ஒதுக்கீடு சட்டத்துக்கான அரசாணையை ரத்து செய்து, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஏற்கனவே இந்த வழக்கு நீதிமன்றத்தில...
Image
  ஆசிரியர்களுக்கான பொது மாறுதல் கலந்தாய்வு எப்போது நடத்தப்படும்? புதிய தகவல்