Posts

Showing posts from November 4, 2021
 பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு: தமிழக அரசு என்ன செய்ய போகிறது? சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்த பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி வாய்ப்பு வழங்க வேண்டும் என தமிழக அரசை மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்   புதிய ஆசிரியர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும் அறிவித்து இருக்கிறார் பல்லாயிரக்கணக்கான புதிய ஆசிரியர்களைத் தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையில், வேலை வாய்ப்பகப் பதிவு மூப்பு அடிப்படையில், ஆசிரியர்கள் பணியில் அமர்த்தப்பட்டு வந்தனர். அதன்படி, 2009, 2010, 2011 ஆம் ஆண்டுகளில், திமுக ஆட்சிக் காலத்தில், வேலைவாய்ப்பு அலுவலகப் பதிவு மூப்பு முறையில் 31,170 பட்டதாரி ஆசிரியர்கள், சான்றிதழ் சரிபார்ப்பிற்காக அழைக்கப்பட்டனர். அதில் 22,351 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். 8819 பேர் கலந்து கொள்ளாத நிலையில் சான்றிதழ்கள் சரிபார்ப்பு முடித்த 11,161 பேர், தேர்வு செய்யப்பட்டு, பணியில் சேர்ந்து விட்டனர்.   இதையடுத்து, 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு 2012ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் சான்றிதழ் சரிபார...
Image