அனைத்து அரசு பள்ளி ஆசிரியர்களின் கவனத்திற்கு.! பொது மாறுதல் குறித்து தமிழக அரசு முக்கிய அறிவிப்பு.!



அரசு ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ளார்.


இது குறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்ட அறிவிப்பில்; அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் நலனுக்காக ஆண்டுதோறும் பொது மாறுதல் நடத்தப்பட்டு வருகிறது. இப்போது மாறுதல்களை ஒளிவுமறைவின்றி 2021-22 ஆம் கல்வி ஆண்டு முதல் நடத்திட பொது மாறுதல் கலந்தாய்வு கொள்கை வகுக்கப்பட்டு வெளிப்படையாக நடைமுறைப்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டது. பள்ளிக்கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் உள்ள மாணவர்கள் ஆசிரியர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப, ஆகஸ்ட் 1-ம் தேதி ஆசிரியர்கள் – மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு மே மாதம் நடத்தப்பட வேண்டும்.


குழந்தைகளுக்கான கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் அடிப்படையிலும், ஆசிரியர் மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையிலும் கல்வித் தகவல் மேலாண்மை முறைமை இணையதளத்தில் உள்ள தகவலின் அடிப்படையிலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிர்ணயம் செய்யப்பட வேண்டும். அதிக ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். பொது மாறுதல் கலந்தாய்வில் 100 % பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியர்கள், 40 % பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்ட ஆசிரியர்கள், டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்குச் சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அடிப்படையில் பணியிட மாறுதல் வழங்கலாம்.


விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்களுக்குக் கலந்தாய்வில் முன்னுரிமை வழங்கலாம். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் 8 ஆண்டு கட்டாயம் ஒரு இடத்தில் பணிபுரிந்து இருக்க வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ள அனுமதி வழங்கப்படும். நிர்வாக மாறுதல் போடுவதற்கு அந்தத் துறை அலுவலர்களுக்கு அனுமதியளிக்கப்படுகிறது. அலகு விட்டு அலகு மாறுதல் ஆசிரியர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. அதற்குரிய தடையின்மைச் சான்று ஆவணங்களைச் சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக பணியில் சேரும் ஆசிரியர்கள் முன்னுரிமை கல்வி ஒன்றியங்களில் கட்டாயம் 5 ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர், மூன்றாண்டுகள் வேறு கல்வி ஒன்றியங்களில் பணி புரியலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog