ஜனவரி 5ஆம் தேதி புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கும்: சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு.
தமிழகத்தில் ஆளுநர் உரையுடன் ஜனவரி 5-ந் தேதி காலை 10 மணிக்கு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு பேட்டியளித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று காரணமாக சமூக இடைவெளியுடன் கலைவாணர் அரங்கில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளுடன் சட்டமன்ற கூட்டத் தொடர் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதால், தலைமைச் செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத்தொடர் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காகிதம் இல்லாத தொடுதிரை வசதி பயன்படுத்தப்படும் என்று தகவல் அளிக்கப்பட்டுள்ளது. ஆளுநர் உரையுடன் தொடங்கும் கூட்டத்தொடரில் அடுத்து பொதுபட்ஜெட் தாக்கல் செய்யப்படும், பிறகு மானியக்கோரிக்கை நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது.
தமிழக அரசு மற்றும் சுகாதாரத்துறையின் தொடர் முயற்சிகளில் கிட்டத்தட்ட 83% நபர்களுக்கு தமிழகத்தில் முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 50 சதவீதத்திற்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் உள்ளதால் தலைமை செயலகத்தில் உள்ள வளாகத்தில் ஏற்கனவே சட்டமன்ற கூட்டத்தொடர் நடைபெற்ற இடத்திலேயே கூட்டத்தொடர் நடைபெற ஏற்பாடுகள் நடந்து வருகிறது. அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் முன்பு தொடுதிரை வசதியுடன் கணினி மூலம் காகிதமில்லா சட்டப்பேரவை நடத்தப்படுகிறது. கலைவாணர் அரங்கில் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பாரவையாளர்களுக்கு அனுமதி இல்லை. இந்நிலையில் தற்போது புனித ஜார்ஜ் கோட்டையில் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் பார்வையாளர்களை அனுமதிப்பது குறித்து அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்திற்கு பிறகு தெரியவரும்.
சட்டசபைக்குள் வரும் அனைவரும் கட்டிப்பாக முகக்கவசம் அணிந்து வர வேண்டும். சபாநாயர்கள் நிறைவேற்றி கொடுக்கும் தீர்மானம் கால தாமதம் இல்லாமல் சட்டமாக வேண்டும் என்று இந்திய அளவில் நடந்த சபாநாயகர் மாநாட்டில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து ஆளுநரிடம் எடுத்துரைக்கும் திட்டம் ஏதும் இல்லை என்று சபாநாயகர் பேட்டியில் தெரிவித்தார்
Comments
Post a Comment