10, 12ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு எப்போது?..அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி விளக்கம்
திருவாரூர் மாவட்ட நூலகத்தில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி நேற்று ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் அளித்த பேட்டி: முதல்வர் மு.க.ஸ்டாலின், கடந்த 2006ல் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தபோது இந்த நூலகத்தை திறந்து வைத்தார். இங்கு 2 லட்சம் புத்தகங்கள் உள்ளது. 16,000 வாசகர்கள் உள்ளனர். 10 ஆண்டுகால அ.தி.மு.க ஆட்சியில் எந்தவித பராமரிப்பும் இல்லாமல் இருந்து வந்தது. பள்ளி கல்வித்துறை நிதியிலும், எம்எல்ஏ நிதியிலும் இங்கு பராமரிப்பு பணிகளை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.
நீட் தேர்வு தொடர்பாக தொடர்ந்து சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2,774 முதுகலை ஆசிரியர்கள் நியமனம் செய்வதற்கு உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடத்திய பின்னர் தான் காலிப்பணியிடம் குறித்து தெரியவரும். விரைவில் கலந்தாய்விற்கான அறிவிப்பு வெளியிடப்பட உள்ளது. தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு வரும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் ரிவிஷன் டெஸ்ட் நடத்தப்படும். அதன் பின்னர் முடிக்கப்பட்டுள்ள பாடங்களை கணக்கில் கொண்டு ஓரிரு மாதங்களில் பொதுத்தேர்வு நடத்தப்படும். ஒமிக்ரான் பரவல் பற்றி சென்னையில் வரும் 25ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடக்கிறது. அந்த கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளின்படி பள்ளிகளின் செயல்பாடு பற்றி தகவல் தெரிவிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Comments
Post a Comment