இல்லம் தேடி கல்வி: தன்னார்வலர்கள் தேர்வு, வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது தமிழக அரசு
தமிழக அரசின் இல்லம் தேடி கல்வித்திட்டம் தமிழ்நாடு பள்ளிக்கல்வித் துறையின் மூலம் செயல்படுத்தப்பட இருக்கிறது.
இந்த திட்டமானது மாணவர்களுக்கு ஒரு மிகப்பெரிய நலனளிக்கும் திட்டமாக உள்ளது.
கொரோனா பெருந்தொற்றுப் (Coronavirus) பரவல் சார்ந்த பொது முடக்க காலங்களில் அரசு பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரி செய்ய இல்லம் தேடிக் கல்வித் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. பள்ளி முடிந்த பின்பு மாலை நேரங்களில் 'இல்லம் தேடிக் கல்வி' மையங்களில் கற்பித்தல் சேவையை மேற்கொள்ள முடிவு செய்ய்யப்பட்டது.
'இந்த திட்டத்தில் பங்குகொள்ள விரும்பும் தன்னார்வலர்கள், தொடர்ச்சியாக வாரத்திற்கு குறைந்தது ஆறு மணி நேரம் குழந்தைகளுடன் செலவிட தயாராக இருக்க வேண்டும். கண்டிப்பாக குழந்தைகளுடன் உரையாட தமிழ் (Tamil) தெரிந்திருக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம், மற்றும் கணிதம் கற்றுத்தர வேண்டும். இந்த ஆர்வலர்களுக்கு குறைந்தபட்சம் 17 வயது நிரம்பி இருக்க வேண்டும்' என்ற நிபந்தனைகளின் அடிப்படையில் தான்னார்வளர்களை பதிவு செய்து கொள்ள வலியுறுத்தப்பட்டிருந்தது.
இதன்படி மாதம் ரூ.1000 சம்பளம் வழங்கப்படும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் முனைவர் பட்டம் முடித்த 450 பேர் உட்பட மொத்தம் ஒரு லட்சம் பேர் இந்த திட்டத்தின் கீழ் பதிவு செய்து இருக்கின்றனர். இவர்களில் முதுகலை பட்டதாரிகள் மற்றும் பட்டதாரிகள் 50 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் என்ற தகவல் வெளியாகி இருந்தது.
இதன் தொடர்ச்சியாக, இன்று, விண்ணப்பித்திருக்கும் தன்னார்வகளை தேர்தெடுப்பதற்க்கான வழிகாட்டு நெறிமுறைகளை தமிழ்நாடு அரசு (TN Government) வெளியிட்டிருக்கிறது. அதன்படி குழந்தைகளை கையாளுவதற்கான திரனறிவு தேர்வு நடத்தப்பட வேண்டும், இதில் பங்குகொள்ள விரும்பும் தன்னார்வலர்கள் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டவராக இருக்க வேண்டும், குறிப்பாக பெண்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கல்விச்சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்ட பின்னர் தேர்வு நடக்க வேண்டும். 1 முதல் 5 ஆம் வகுப்பு மாணவர்களை கையாளுப்பவர்களுக்கான கல்வித் தகுதி 12-ம் வகுப்பாகவும், 6 முதல் 8 அம் வகுப்பு மாணவர்களை கையாளுப்பவர்க்கான கல்வித்தகுதி பட்டப்படிப்பாகவும் நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது. மேலும், ஏதாவது ஒரு சந்தர்பத்தில், இதில் தேர்வு செய்யப்பட்டவர் இப்பணிக்கு தகுதியானவர் இல்லை என்பது தெரியவந்தால் உடனடியாக அவர் நீக்கப்படுவார் எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது
Comments
Post a Comment