அரசு பள்ளிகளில் இந்தாண்டு 5.80 லட்சம் மாணவர்கள் புதிதாக சேர்ப்பு - கல்வித்துறை அமைச்சர்
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பள்ளிகள் மூடப்பட்டிருந்தது
தற்போது கொரோனா பரவல் குறைந்துள்ளதால், மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், அரசு பள்ளியில் சேர்க்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
சென்னையில் புதிய ஆன்லைன் நூலகத்தை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் அன்பில் மகேஷ் பேட்டி அளித்தபோது, பொதுத்தேர்வுகள் கடந்த ஆண்டை போலவே மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறும். தள்ளிப்போக வாய்ப்பு இல்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவர், இந்த ஆண்டு அரசுப் பள்ளிகளில் 5.80 லட்சம் பேர் புதிதாக சேர்ந்துள்ளனர். மாணவர்களின் பாதுகாப்புக்காக 1098 மற்றும் 14417 ஆகிய உதவி எண்கள் அனைத்து வகுப்பறைகளிலும் ஒட்டப்படும் என்று தெரிவித்தார்.
Comments
Post a Comment