Posts

Showing posts from February 8, 2020
டிஎன்பிஎஸ்சி தேர்வில் நடைபெற்ற முறைகேடுகளைத் தடுக்க 6 புதிய சீர்திருத்தங்களை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது. ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் செய்வதைத் தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயம், தேர்வு மைய விருப்பமாக 3 மாவட்டங்களைத் தேர்வு செய்தல், தேர்வானர்களின் முழு விவரங்களும் இணையதளத்தில் வெளியிடுவது உள்ளிட்ட 6 முக்கிய சீர்திருத்தங்களை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. குரூப் 4, குரூப் 2ஏ தேர்வுகளில் முறைகேடுகள் நடந்தது வெளிச்சத்துக்கு வந்ததை அடுத்து, டிஎன்பிஎஸ்சி நிர்வாகம் இந்த முடிவை எடுத்துள்ளது. இனி வரும் காலங்களில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் இந்த புதிய 6 சீர்திருத்தங்கள் பின்பற்றப்பட உள்ளன. அதாவது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஒரு நபர் ஒன்றுக்கும் மேற்பட்ட விண்ணப்பங்களை பதிவு செய்வதைத் தடுக்கும் வகையில் ஆதார் கட்டாயமாக்கப்படும். தேர்வு குறித்து அனைத்து நடைமுறைகளும் முடிந்த பிறகு தேர்வர்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்படும். கட்டணம் செலுத்தி விடைத்தாள் நகலை தேர்வர்கள் உடனடியாகப் ...