அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1060 விரிவுரையாளர் பணிகளுக்கு ஜனவரி 22ஆம் தேதி முதல் பிப்ரவரி 12ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள விரிவுரையாளர் பணிகள் பூர்த்தி செய்யப்படவுள்ளன. குறிப்பாக சிவில் இன்ஜினியரிங் 112, மெக்கானிக்கல் இன்ஜினியரிங் 219, எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியரிங் 91, எலக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் இன்ஜினியரிங் 119, கம்ப்யூட்டர் இன்ஜினியரிங் 135, ஆங்கிலம் 88, கணக்கு 88, இயற்பியல் 83, வேதியியல் 84 உட்பட மொத்தம் 1060 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் 2017 -18 கல்வி ஆண்டில் 1058 பணியிடங்களும், ஏற்கனவே நிரப்ப வேண்டிய காலி பணியிடங்கள் இரண்டும் இதன் மூலம் நிரப்பப்படும். இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் லதா அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். செய்திக் குறிப்பு: இந்த அறிவிப்பில் , "அரசு பாலிடெக்னிக் கல்லூரி விரிவுரையாளர்கள் காலி பணியிடத்திற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 நவம்பர் 27ஆம் தேதி வெளியிட்டத...