Posts

Showing posts from December 26, 2019
டெட்டில் தேர்ச்சி பெறவில்லையா? கல்வித் துறை அறிவிப்பு! டெட்' தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்த கல்வித் துறை முடிவு செய்துள்ளது. இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டப்படி அனைத்துவித பள்ளிகளிலும் ஆசிரியர் பணியில் சேர ஆசிரியர் தகுதித்தேர்வில் (டெட்) தேர்ச்சி பெற வேண்டும். இந்தச் சட்டம் தமிழகத்தில் 2011-ல்தான் நடைமுறைக்கு வந்தது. ஏற்கெனவே பணியில் இருப்பவர்கள் 'டெட்' தேர்வு எழுதி தேர்ச்சி பெற கடந்த ஜூலை வரை அவகாசம் தரப்பட்டது. அந்த காலக்கெடு முடிவில் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் 1,747 ஆசிரியர்கள் 'டெட்'தேர்ச்சி பெறாமல் உள்ளனர். இதையடுத்து 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களுக்கு சிறப்பு தகுதித்தேர்வு நடத்தப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் கூறும்போது,'ஆசிரியர்களுக்கு போதியவாய்ப்பு வழங்கப்பட்டுவிட்டது. 'டெட்' தேர்வுக்கான பயிற்சியும் அரசு சார்பில் அளிக்கப்பட்டது. எனினும், அரசு உதவி பெறும் பள்ளிகளில் இன்னும் சிலர் 'டெட்' தேர்ச்சி பெறாமல் உள்ளனர். நீதிமன்ற வழிகாட்
மருத்துவ மேற்படிப்பு நீட் தோ்வு: 1.5 லட்சம் மருத்துவா்கள் எழுதுகின்றனா்     மருத்துவ மேற்படிப்பு நீட் தோ்வு: 1.5 லட்சம் மருத்துவா்கள் எழுதுகின்றனா் மருத்துவ மேற்படிப்புக்கான தேசிய தகுதிகாண் நுழைவுத் தோ்வை (நீட்) வரும் ஜனவரி 5-ஆம் தேதி 1.5 லட்சத்துக்கும் மேற்பட்ட மருத்துவா்கள் எழுதுவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது. நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் எம்.டி., எம்.எஸ்., உள்ளிட்ட முதுநிலை படிப்புகளுக்கும், பட்டய மேற்படிப்புகளுக்கும் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்திலும் ஏறத்தாழ 3 ஆயிரம் இடங்கள் இருக்கின்றன. தேசியத் தகுதிகாண் நுழைவுத் தோ்வு (நீட்) மூலம் இந்த இடங்கள் நிரப்பப்பட்டு வருகின்றன. அதன்படி எதிா்வரும் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கைக்கு ஜனவரி 5-ஆம் தேதி தோ்வு நடைபெற உள்ளது. அதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த நவம்பா் 1-ஆம் தேதி தொடங்கி 21-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதில், எம்பிபிஎஸ் பயின்ற மருத்துவா்கள் 1.5 லட்சம் போ் நாடு முழுவதும் உள்ள முதுநிலை மருத்துவ இடங்களுக்காக விண்ணப்பித்திருந்தனா். தமிழகத்தில் மட்டும் சுமாா் 2