
பி.எட்., தேர்ச்சி 80 சதவீதம்; 'டெட்' தேர்ச்சி 0.8 சதவீதம்! கவனிக்குமா கல்வியியல் பல்கலை தமிழகத்தில் பி.எட்., தேர்வில் 80 சதவீதம் தேர்ச்சி பெறுவோர் ஆசிரியர் தகுதி தேர்வில் (டெட்) 0.8 சதவீதம் பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றதால் பள்ளி கல்வி போல் கல்வியியல் பாடத்திட்டத்தை மாற்றியமைக்க வேண்டும்' என கல்வியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.கல்வியியல் படிப்பிற்கு சென்னையில் மட்டுமே பல்கலை உள்ளது. இதன் கீழ் 700க்கும் மேல் அரசு மற்றும் தனியார் பி.எட்., மற்றும் எம்.எட்., கல்லுாரிகள் உள்ளன. தமிழகத்தில் ஐந்தரை லட்சம் பேர் பி.எட்., தகுதியுடன் வேலைக்கு காத்திருக்கும் நிலையில் ஆண்டுதோறும் 50 ஆயிரம் பேர் பி.எட்., முடிக்கின்றனர்.கட்டாயக் கல்வி உரிமை சட்டம் (ஆர்.டி.இ.,) அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் பணிக்கு டெட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில் அதன் டெட் தேர்ச்சி ஒருசதவீதத்தை கூட எட்டாதது கவலையளிக்கிறது. டெட் தாள் இரண்டை 3,79,733 பேர் எழுதி324 பேர் மட்டும் தேர்ச்சி பெற்றது குறிப்பிடத்தக்கது. எனவேடெட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் பி.எட்., பாடத் திட்டத்தை தரமானதாக மாற்றியமை...