உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு! உச்ச நீதிமன்றத்தில் மாநிலத் தோதல் ஆணையம் உறுதியளித்ததன் அடிப்படையில், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோதல் தேதி திங்கள்கிழமை (டிச. 2) காலை 10 மணியளவில் வெளியிடப்பட்டது. மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடத்தப்படும். இதற்கான தேர்தல் அறிவிக்கை டிசம்பர் 06-ஆம் தேதி வெளியிடப்படும், மேலும் அன்றைய தினம் முதல் வேட்புமனு தாக்கல் தொடங்கப்படும். வேட்புமனு தாக்கல் செய்ய இறுதிநாள் டிசம்பர் 13-ஆம் தேதியும், வேட்புமனு ஆய்வு 16-ஆம் தேதியும், வேட்புமனு திரும்பப்பெறுவது 18-ஆம் தேதியும் நடைபெறும் என்று அறிவித்தார்.
Posts
Showing posts from December 2, 2019
- Get link
- X
- Other Apps
நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது? எம்.பி.பி.எஸ்., படிப்பில் சேர்வதற்கான, 'நீட்' நுழைவு தேர்வுக்கான அறிவிப்பு இன்று வெளியாகிறது.பிளஸ் 2 முடிக்கும் மாணவர்கள், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளில் சேர, நீட் நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அரசு ஒதுக்கீட்டிலும், தனியார் கல்லுாரிகளின் நிர்வாக ஒதுக்கீட்டிலும், நீட் தேர்வு அடிப்படையில் மட்டுமே, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர்.நடப்பு கல்வி ஆண்டுக்கான, நீட் நுழைவு தேர்வு, மே, 3ல் நடக்கிறது. இதற்கான, 'ஆன்லைன்' பதிவு இன்று துவங்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. தேசிய தேர்வு முகமையின் முந்தைய அறிவிப்பில், இந்த தேதி குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி, நீட் தேர்வுக்கான விபரங்கள் இன்று வெளியாகும் என, எதிர்பார்க்கப் படுகிறது.