Posts

Showing posts from November 24, 2019
டிசம்பரில் நடக்கும் அரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரி வினாத்தாள்: பள்ளிக்கல்வி துறை அறிவுறுத்தல் அரையாண்டுத் தேர்வில் அனைத்து பள்ளிகளுக்கும் ஒரே மாதிரியான வினாத்தாள்கள் வழங்க கல்வித் துறை அறிவுறுத் தியுள்ளது. தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில் 1 முதல் 8-ம் வகுப்பு வரை பருவத்தேர்வுகளும் 9 முதல் பிளஸ் 2 வரை காலாண்டு, அரையாண்டு மற்றும் முழு ஆண்டு தேர்வுகள் முறையும் அமலில் உள்ளன. அதன்படி, நடப்பு கல்வியாண்டுக்கான 2-ம் பருவம் மற்றும் அரையாண்டுத் தேர்வுகள் டிசம்பர் மாதம் நடைபெற உள்ளன. அதன்படி பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான அரையாண்டுத் தேர்வு டிசம்பர் 11-ல் தொடங்கி 23-ம் தேதி நிறைவடைகிறது. இதேபோல் 9, 10-ம் வகுப்பு களுக்கு அரையாண்டுத் தேர்வும்இதர வகுப்புகளுக்கு 2-ம் பருவத்தேர்வும் டிசம்பர் 13-ல் தொடங்கி 23-ம் தேதி நிறைவடைகிறது அதன்பின், டிச.24 முதல் ஜனவரி 2-ம் தேதி வரை பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை விடப்பட உள்ளது. இதற்கிடையே அரசு, அரசுஉதவி மற்றும் தனியார் பள்ளிகளுக்கு அரையாண்டுத் தேர்வின்போது ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்க வேண்டும். தேர்வைஎவ்வித புகார்களுக்கும்...