புதிய பாடத்திட்டம் - ஆசிரியர்கள் திணறல்? தமிழகத்தில் தற்போது அனைத்து வகுப்புகளுக்கும், புதிய பாடத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. குறிப்பாக, பொதுத்தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 அனைத்து பிரிவுகளுக்கும், புதிய பாடத்திட்ட அடிப்படையில், கற்பித்தல் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.கிட்டத்தட்ட, 12 ஆண்டுகள் பழமையான பாடத்திட்டம் மாற்றப்பட்டதில், பெரும் வரவேற்பை பெற்றுள்ளது பாடத்திட்ட குழு. ஆனால், அதிக பாடங்கள், கல்லுாரி கல்விக்கு இணையான அளவில், அறிவியல் பாடங்களில் இடம்பெற்றுள்ள கருத்துக்கள், திகட்ட திகட்ட அறிவு பெட்டமாக இடம்பெறும் தகவல்களால், மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆசிரியர்கள் திணறல் குறிப்பாக, முக்கிய பாடங்கள் கற்பிக்கும் ஆசிரியர்கள், பெரிதும் சிரமப்படுகின்றனர். ஒதுக்கப்பட்ட பாடவேளைகளில், வகுப்பு நடத்தினால், சிலபஸ் முடிக்க முடியாத நிலை ஏற்படுவதால், மாலை நேர வகுப்புகள், சிறப்பு வகுப்புகள் என அழுத்தம் கொடுக்கப்படுகிறது.கருத்துகளை உள்வாங்க, குறிப்பிட்ட இடைவேளை கூட அளிக்காமல், வகுப்புகள் தொடர்வதால், மாணவர்கள் திணறும் நிலை ஏற்பட்டுள்ளது. காலாண்டு தேர்வு ...
Posts
Showing posts from October 30, 2019